அர்ஜெண்டினாவில் கட்டுப்பாடு இல்லாத ஊரடங்கு

0
141

அர்ஜெண்டினாவில் எப்பொதும் இல்லாத அளவில்கொரோனா நோய்த்தொற்றுச் சம்பவங்கள் நேற்றுப் பதிவாயின. கடந்த 24 மணிநேரத்தில் அங்குப் புதிதாக 11,717 பேருக்குக் கொரோனா கிருமித்தொற்று அடையாளம் காணப்பட்டது. அர்ஜெண்டினாவில் கடந்த மார்ச் மாதம் நடப்புக்கு வந்த கட்டுப்பாடுகள் செப்டம்பர் மாதம் 20ஆம் தேதியுடன் முடிவுறும். இருப்பினும் நோய்த்தொற்று தொடர்பாக அங்கு அறிவிக்கப்பட்ட அந்தக் கட்டுப்பாடுகள் சற்றுத் தளர்த்தப்பட்டுள்ளன. தற்போது பொது இடங்களில் 10 பேர் ஒன்றுகூடுவதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. பொது இடங்களில் முகக்கவசம் அணிவதுடன் 2 மீட்டர் பாதுகாப்பு இடைவெளி கடைப்பிடிக்கப்படவேண்டும். அர்ஜெண்டினாவில் சுமார் 392,000 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது; 8,271 பேர் இறந்தனர்.

Previous articleசீனாவில் அனைத்து பள்ளிகளும் திறக்கப்படும்
Next articleகள்ளச்சாராய கும்பலை பிடிக்க சென்ற போலீஸாருக்கு நடந்த விபரீதம்!