கொலம்பியாவில் இருபது ஆயிரத்தை நெருங்கும் பலி எண்ணிக்கை

0
110
சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகின் 210 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. உலக அளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் பட்டியலில் மெக்சிகோவை பின்னுக்குத் தள்ளி கொலம்பியா 7-வது இடத்தில் உள்ளது. இந்நிலையில், கொலம்பியாவில் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 6 லட்சத்தை நெருங்குகிறது. கொலம்பியாவில் ஒரே நாளில் 9,394 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். இதனால் கொரோனாவுக்கு சிக்கி பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6 லட்சத்தை நெருங்குகிறது.  கொரோனா தாக்குதலால் 297 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து, அங்கு கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 19 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
Previous articleகொரோனாவால் ரஷ்யாவில் இத்தனை ஆயிரம் பேர் பலியா?
Next articleகொரோனா பற்றி சுவாரிசியமான தகவல்