கொரோனாவால் ரஷ்யாவில் இத்தனை ஆயிரம் பேர் பலியா?

0
59

உலகம் முழுவதும் 200 க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் பரவி மனித இனத்துக்கே பெரிய ஆபத்தை ஏற்படுத்தி வருகிறது. உலக நாடுகள் அனைத்தும் இயல்பு நிலைக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றன. சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியின் இறுதி கட்டத்தை விஞ்ஞானிகள் எட்டியுள்ளனர். ஆனாலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்து 34 ஆயிரத்தை கடந்துள்ளது. உலக அளவில் கொரோனா வைரஸ் தாக்குதலில் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 2.50 கோடியைத் தாண்டியுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து 1.74 கோடி பேர் குணமடைந்துள்ளனர். ரஷ்யாவில் மேலும் 4941 பேருக்கு கொரோனா உறுதியானதால் அங்கு பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 9.85 லட்சத்தை தாண்டியது. ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் 4,941 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் அங்கு வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9 லட்சத்து 85 ஆயிரத்து 346 ஆக அதிகரித்துள்ளது. மேலும், கொரோனா வைரஸ் தொற்றுக்கு 111 பேர் பலியாகினர். இதையடுத்து, அங்கு பலியானோர் எண்ணிக்கை 17 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.

author avatar
Parthipan K