உலகம் முழுவதும் குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது

0
104

உலகம் முழுவதும் 200 க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் பரவி மனித இனத்துக்கே பெரிய ஆபத்தை ஏற்படுத்தி வருகிறது. உலக நாடுகள் அனைத்தும் இயல்பு நிலைக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றன. சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியின் இறுதி கட்டத்தை விஞ்ஞானிகள் எட்டியுள்ளனர்.

ஆனாலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்து 34 ஆயிரத்தை கடந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 2.53 -கோடியாக உயர்ந்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1 கோடியே 79 லட்சத்தை கடந்துள்ளது.

Previous articleசோலார் மயமாக்கப்படும் ரயில் நிலையங்கள்! 10 ஆண்டுகளுக்குள் நிர்ணயிக்கப்படும் இலக்கு!
Next articleதமிழகத்தில் இந்த பஸ்கள் மட்டுமே இயக்கப்படும்:! தமிழக அரசின் அறிவிப்பு!