சோலார் மயமாக்கப்படும் ரயில் நிலையங்கள்! 10 ஆண்டுகளுக்குள் நிர்ணயிக்கப்படும் இலக்கு!

0
73

சோலார் மயமாக்கப்படும் ரயில் நிலையங்கள்! 10 ஆண்டுகளுக்குள் நிர்ணயிக்கப்படும் இலக்கு!

நமது நாட்டில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களையும் சோலார் மயமாக்கப்படும். இத்திட்டம் 2030க்குள் தன்னிறைவு பெற இலக்கை நிர்ணயித்துள்ளது.

மாசு இல்லாத ரயில்கள் இயங்க சூரிய ஒளி பயன்பாட்டை அதிகரித்து மின்சாரம் சேகரித்து ரயில்கள் இயக்கப்படும் என்று கூறியுள்ளது. அதனால் சூரிய ஒளி மின்சாரத்தை உற்பத்தி செய்ய பல்வேறு திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.

2030க்குள் கார்பன் மாசு இல்லாத துறையாக ரயில்வே துறை மாறவேண்டும் என்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.

இத்திட்டத்தின் முதல் கட்டமாக 963 ரயில்நிலையங்களின் கூரைகளின் மீது சூரிய ஒளி மின்தகடுகள் பொருத்தப்பட்டுள்ளன.ஹைதராபாத், ஹௌரா, செகந்தராபாத், கொல்கத்தா, கவுஹாத்தி,புது தில்லி, பழைய தில்லி, வாராணசி, ஜெய்ப்பூர் ஆகிய ரயில் நிலையங்களில் கூரைகளின் மீது சூரிய ஒளி மின் தகடுகள் பொருத்தப்பட்டுள்ளன.

மேலும் 198 மெகா வாட் திறன் கொண்ட சூரிய மின் தகடுகளை 550 ரயில் நிலையங்களில் பொருத்துவதற்கு திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.2023-க்குள் இந்திய ரயில்வே முழுவதும் சோலார் மயமாக்கப்படும்.

தனியார் நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் ரயில்வேக்கு சொந்தமான 51,000 ஏக்கர் காலி இடங்களில் சூரிய ஒளி மின் நிலையங்களை நிறுவ திட்டமிட்டுள்ளது.

இதன் மூலம் 20 கிகா வாட் மின்சாரத்தை 2030க்குள் உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளது.

இதற்காக 3 கிகா வாட் சூரிய ஒளி மின்நிலையங்களை அமைக்க, பொதுத்துறை நிறுவனமான ரயில்வே ஆற்றல் மேலாண்மை நிறுவனம் (ஆர்இஎம்சிஎல்) ஏற்கெனவே ஒப்பந்தப்புள்ளிகளைக் கோரியுள்ளது குறிப்பிடத்தக்கது.

author avatar
Kowsalya