ரஷ்யாவில் இத்தனை லட்சத்தை தாண்டியதா கொரோனா?

0
106
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 2 கோடியே 56 லட்சத்தை கடந்துள்ளது. குறிப்பாக இந்தியா, அமெரிக்கா, பிரேசிலில் கொரோனா வேகமெடுத்துள்ளது. இந்திய அரசு நேற்று வெளியிட்ட தகவலில் 24 மணி நேரத்தில் 78 ஆயிரத்து 512  பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல் கடந்த 24 மணி நேரத்தில் பிரேசிலில் 48 ஆயிரத்து 590 பேருக்கும், அமெரிக்காவில் 38 ஆயிரத்து 199 பேருக்கும் புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் உலக அளவில் கொரோனா வேகமாக பரவும் நாடுகள் பட்டியலில் இந்தியா தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் 2 கோடியே 56 லட்சத்து 22 ஆயிரத்து 351 பேருக்கு கொரோனா பரவியுள்ளது. கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள் வரிசையில் ரஷ்யா 4-வது இடத்தில் உள்ளது. இந்நிலையில், ரஷ்யாவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 10 லட்சத்தைத் தாண்டியுள்ளது.
Previous articleஅமீரகத்தில் இந்த மூன்று இடங்களில் போட்டி நடைபெறும்?
Next articleஇனி பெண்கள் பேஸ்புக் மற்றும் டுவிட்டர் மூலமாகவே புகார் அளிக்கலாம்! புதிய வசதி!