இனிமே இத எந்த கடையிலயாச்சும் பாத்தோம் உடனே ஆக்க்ஷன் தான்! அமைச்சர் அதிரடி!!
தமிழ்நாட்டில் குட்கா போன்ற பொருட்களை விற்பனை செய்யும் அனைத்து கடைகளும் சீல் வைக்க வேண்டும் என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்திருக்கின்றார். இதனை தொடர்ந்து தமிழகத்தில் குட்கா மதுரம் பான்மசாலா போன்ற பொருட்களை விற்பனை செய்வதற்கு தடை விதிக்கப்பட்டு இருக்கின்றது.
தமிழகத்தில் பல பகுதிகளில் இருந்தும் மக்கள் சகஜமாக குட்காவை வாங்கி வருகின்றனர். அதிமுக ஆட்சி காலத்தில் எதிர்க்கட்சியாக இருந்த திமுக, சட்டமன்றத்தில் குட்கா மற்றும் பான் மசாலா போன்ற பொருட்களை மாலையாக அணிவித்து கொண்டு தமிழகத்தில் பரவலாக விற்பனையாகிறது என்று குற்றம் சாட்டியிருந்தது.
இது குறித்த நீதிமன்றத்தில் வழக்கு இருந்து வருகிறது. தற்போது அதனை தொடர்ந்து திமுக ஆளுங்கட்சியாக மாறிய இந்த நேரத்திலும், தமிழகத்தில் விற்கப்படும் குட்கா விற்பனை அதேபோன்று இருப்பதன் காரணமாக இது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் அவர்கள்,
‘தமிழகத்தில் குட்கா பொருட்களை விற்பனை செய்யும் கடைகளுக்கு சீல் வைக்க வேண்டும் என்றும் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் காவல் துறை, உள்ளாட்சி துறையுடன் இணைந்து தமிழகத்தில் உள்ள அனைத்து குட்கா பொருட்களை விற்கும் கடைகளுக்கு சீல் வைக்கப்படும் பணிகளில் ஈடுபட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.
மேலும் குட்கா விற்கும் கடைகளை சீல் வைத்து விட்டால் குட்கா மற்றும் பான்மசாலா ஒரே மாதத்தில் ஒழித்துவிடலாம் என்று திமுக அமைச்சர் சுப்பிரமணியன் அறிவித்து இருக்கின்றார்.