கொரோனாவின் அடுத்த அலை துவங்கியதால் அரசு கன்புயூஷன்!! டெல்டா கொரோனா பரவல் உச்சம்!!

0
126

கொரோனாவின் அடுத்த அலை துவங்கியதால் அரசு கன்புயூஷன்!! டெல்டா கொரோனா பரவல் உச்சம்!!

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பிரான்ஸ் நாட்டின் நான்காவது அலை தொடங்கியுள்ளது. மேலும் இந்த நிலையில் கட்டுப்பாடுகளை அந்த நாட்டு அரசு மீண்டும் தீவிரப்படுத்தி இருக்கின்றது. இந்தியாவில் கண்டறியப்பட்ட டெல்டா கொரோனா தற்போது உலக நாடுகளில் அதிகமாக பரவத் தொடங்கிவிட்டது.

மேலும் அமெரிக்காவில் தொடங்கி ஆஸ்திரேலியா வரை பல்வேறு நாடுகளிலும் டெல்டா பாதிப்பு ஏற்படுத்தி இருக்கின்றது. இதுவரை கண்டறியப்பட்டுள்ள உருமாறிய கொரோனா தீவிரமாக பரவி இருப்பதாக உலக சுகாதார அமைப்பானது கூறியுள்ளது.

மேலும், 100க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி இருப்பதாக தகவல் வந்துள்ளது. அதனைத் தொடர்ந்து சில மாதங்களாக குறைந்து இருந்த பல நாடுகளில் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் இப்பொழுது உச்சத்தைத் தொட்டிருக்கிறது. பிரான்ஸ் நாட்டில் ஒரு நாளில் மட்டும் 21 ஆயிரம் பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வந்துள்ளது.

மேலும் இந்த வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை அந்த நாட்டு அரசு மீண்டும் தீவிரப்படுத்தி இருக்கின்றது. ஹெல்த் பாஸ்போர்ட் திட்டத்தை இந்த அரசு தெரிவித்திருக்கிறது. மேலும் பொது மக்கள் ஒன்று கூடும் இடங்களுக்கு செல்ல வேண்டுமென்றால் தடுப்பூசி போட்டதற்க்கான சான்றுதழ் அல்லது நெகடிவ் சான்றிதழ் என்பது கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்று அறிவித்து இருக்கின்றது.

இதனை தொடர்ந்து நாட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. சான்றிதழை அனைத்து இடங்களுக்கும் கையோடு எடுத்துச் செல்ல முடியுமா? அது முடியாத காரியம் என்று தெரிவித்திருக்கின்றனர். மேலும் இந்தத் திட்டத்தை ஆதரித்துப் பேசிய பிரான்ஸ் பிரதமர், ‘நாம் இப்போது கொரோனா நான்காவது அலையில் இருக்கின்றோம். அனைவருக்கும் தடுப்பது செலுத்துவது மட்டுமே வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்தும் ஒரே வழி’ என்று கூறினா.

மேலும் பிரான்ஸ் நாட்டில் பல மாதங்களுக்குப் பிறகு தினசரி வைரஸ் பாதிப்பு இந்த அளவுக்கு அதிகரித்து உள்ளதாக கூறியுள்ளார். அதனை தொடர்ந்து தடுப்பூசி செலுத்த வருபவர்கள் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து இருக்கிறது. மன நிலையை மக்களுக்கு எவ்வாறு மாற்றுவது என்று தெரியாமல் பிரான்ஸ் அரசு மிகவும் குழப்பத்தில் இருக்கிறது. பிரான்ஸ் மக்கள் தொகையில் 75 சதவீதம் பேருக்கு ஒரு டோஸ் வேக்சின் போடப்பட்டிருக்கிறது.

author avatar
Jayachithra