இந்தியாவில் பள்ளிகள் திறப்பு?!! வெளியான முக்கிய அறிவிப்பு!!

0
120

இந்தியாவில் பள்ளிகள் திறப்பு?!! வெளியான முக்கிய அறிவிப்பு!!

நாடு முழுவதும் கொரோனா தொற்றானது மிகவும் மோசமான நிலையில் இருந்து வந்தது. மேலும், அதன் காரணமாக பல உயிர்கள் இறந்தன. மேலும் , கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக பள்ளிகள் முதல் கோவில்கள் வரை அனைத்தும் மூடப்பட்டன.

அதுமட்டுமல்லாமல் தளர்வுகள் அற்ற ஊரடங்கு மற்றும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்குகள் கடைபிடிக்கப்பட்டது.அப்படி கெடுபிடிகள் இருந்தாலும் மக்கள் பொது இடங்களில் கூட்டம், கூட்டமாக தான் சுற்றி திரிந்தனர். அதன் பின் வைரஸை கட்டுப்படுத்த அரசு தளர்வுகளற்ற முழு ஊரடங்கை அமல்படுத்தியது. இதனையடுத்து கொரோனா வைரஸின் இரண்டாவது தாக்கம் கட்டுக்குள் வந்தது.

இதனை அடுத்து இந்தியாவில் பள்ளிகள் திறக்கும் விதத்தில் சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என்று எய்ம்ஸ் தலைவர் ரன்தீப் குலேரியா தெரிவித்திருக்கின்றார். இந்த நிலையில் 12 முதல் 18 வயது வரை உள்ளவர்கள் சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தி பரிசோதனை நடைபெற்று வருகிறது.

அத்துடன் செப்டம்பர் மாதம் முதல் தடுப்பூசி செலுத்த வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்திருக்கின்றார். எனவே இதனைப் பற்றி எய்ம்ஸ் தலைவர் ரன்தீப் குலேரியா இந்தியாவில் பள்ளிகள் திறக்கும் விதத்தில் சிறுவர்களுக்கு தடுப்பூசியானது செலுத்தப்படும் என்று தெரிவித்திருக்கின்றார்.

மேலும், தடுப்பூசி பயன்பாட்டிற்கு வந்த பிறகு அனைத்து வகுப்பினருக்கும் பள்ளிகளைத் இருக்கலாம் என்று அவர் தெரிவித்திருக்கின்றார்.

Previous articleஇந்துக்கள் மற்றும் பாரதமாதவை இழிவாக பேசிய பாதிரியார்! போலீசாரின் அதிரடி!
Next articleசிக்குன்னு நின்னு கவர்ச்சி காட்டும் யாஷிகா!! குதூகலத்தில் நெட்டிசன்கள்!!