தீராத சளி தொல்லை? இதை மட்டும் செய்து பருகுங்கள்!! உடனடி தீர்வு கிடைக்கும்!!

0
92
#image_title

தீராத சளி தொல்லை? இதை மட்டும் செய்து பருகுங்கள்!! உடனடி தீர்வு கிடைக்கும்!!

பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவரையும் எளிதில் பாதிக்கும் நோய்களில் ஒன்று சளி, இருமல். இவை சாதாரன நோய் பாதிப்பு என்றாலும் அலட்சியப் படுத்தினால் உடலில் பல்வேறு பிரச்சனைகளை உருவாக்கி விடும். இன்றைய காலத்தில் உடலை ஆரோக்கியமாக வைப்பது என்பது மிகவும் முக்கியமான ஒன்று. எந்த நோய் எப்படி வருமென்றே சொல்ல முடியாது. அதனால் இந்த சளி மற்றும் இருமல் பாதிப்பை ஆரம்ப நிலையிலேயே குணப்படுத்தி கொள்வது மிகவும் முக்கியம். இதற்கு இயற்கை வழிகளை பாலோ செய்வது மிகவும் சிறந்த ஒன்று.

தேவையான பொருட்கள்:-

*துளசி – 10 இலைகள்

*இஞ்சி – 1 துண்டு

*மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி

*கருப்பு மிளகு – 5 முதல் 7

*பனங்கற்கண்டு – தேவையான அளவு

செய்முறை:-

முதலில் 5 முதல் 7 கரு மிளகு எடுத்து ஒரு உரலில் போட்டு இடித்துக் கொள்ளவும். அடுத்து அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் 1 1/2 கிளாஸ் அளவு தண்ணீர் ஊற்றி கொள்ளவும். பிறகு மஞ்சள் தூள் 1/2 தேக்கரண்டி சேர்த்து கலக்கி கொள்ளவும். அதோடு இடித்த கரு மிளகு மற்றும் ஒரு துண்டு இஞ்சி சேர்த்து கொதிக்க விடவும்.

இந்த கலவை கொதிக்கும் தருணத்தில் மருத்துவ குணம் நிறைந்த மூலிகையான துளசியை சேர்த்து கொதிக்க வைத்து அடுப்பை அணைக்கவும்.

பின்னர் இதை ஒரு கிளாஸில் வடிகட்டி சுவைக்காக சிறிதளவு பனங்கற்கண்டு சேர்த்து கலக்கி பருகவும். இவ்வாறு செய்து பருகினால் உடலில் தேங்கி கிடந்த சளி முழுவதும் கரைந்து அவை மலம் வழியாக வெளியேறி விடும்.

மற்றொரு ரெமிடி:-

*ஆடாதோடை இலை – 2

*தும்பைப்பூ – 10

*தாளிசபத்திரி – 1/4 தேக்கரண்டி

*தேன் – 3 துளிகள்

செய்முறை:-

ஒரு உரலில் தும்பைப்பூ, தாளிசபத்திரி, ஆடாதோடை இலை மூன்றையும் சேர்த்து நன்கு இடித்து சாறு எடுத்து கொள்ளவும். பிறகு அதில் 3 துளிகள் தேன் சேர்த்து நன்கு குழைத்து அவற்றை சளி பாதிப்பு இருக்கும் நபர்களின் நாக்கில் படும்படி வைக்கவும். ஒரு நாளைக்கு 3 முதல் 4 முறை வைத்து வந்தால் தீராத சளி, இருமல் உள்ளிட்ட பாதிப்புகள் விரைவில் குணமாகும்.

Previous articleஉடல் எடையை குறைக்க உடற்பயிற்சி தேவையில்லை!!! தினமும் தூங்கும் முன்பு இதை குடித்தால் போதும்!!!
Next articleகேரளா பாரம்பரிய இனிப்பு: “மட்டை அரிசி பாயசம்” – சுவையாக செய்வது எப்படி?