நெஞ்சில் பல நாள் தேங்கி கிடக்கும் சளியை கரைத்து வெளியேற்ற உதவும் கசாயம்!

0
224
#image_title

நெஞ்சில் பல நாள் தேங்கி கிடக்கும் சளியை கரைத்து வெளியேற்ற உதவும் கசாயம்!

பெரியர்வர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவருக்கும் நெஞ்சு பகுதியில் சளி கோர்ப்பது சாதாரண ஒன்று தான். ஆனால் அதை விரைவில் குணப்படுத்திக் கொள்ள தவறினால் சுவாசம் தொடர்பான பாதிப்பை சந்திக்க நேரிடும்.

தேவையான பொருட்கள்:-

1)திப்பிலி
2)சுக்கு
3)மிளகு
4)ஓமம்
5)வெற்றிலை

செய்முறை:-

உரலில் ஒரு திப்பிலி, 1 துண்டு தோல் நீக்கிய சுக்கு, 4 மிளகு மற்றும் 1/4 தேக்கரண்டி ஓமம் போட்டு இடித்து எடுத்துக் கொள்ளவும்.

அடுத்து ஒரு வெற்றிலையை காம்பு மற்றும் அதன் தண்டை நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

பிறகு ஒரு பாத்திரம் எடுத்து 250 மில்லி தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைக்கவும். தண்ணீர் சூடானதும் அதில் இடித்த திப்பிலி கலவை பொடியை சேர்க்கவும்.

அடுப்பை குறைவான தீயில் வைத்து கொதிக்க விடவும். பிறகு அதில் நறுக்கி வைத்துள்ள வெற்றிலையை போட்டு 100 மில்லி அளவு வரும் வரை கொதிக்க விடவும்.

சேர்த்து பொருட்கள் அனைத்தும் நன்கு கொதித்து வந்ததும் அடுப்பை அணைத்து விடவும். இதை 5 நிமிடங்களுக்கு மூடிவிட்டு பிறகு ஒரு கிளாஸிற்கு வடிகட்டி குடிக்கவும்.

இந்த கசாயம் நாசி, நெஞ்சு பகுதியில் பல நாளாக தேங்கி கிடந்த கெட்டி சளியை கரைத்து வெளியேற்றிவிடும்.

அதுமட்டும் இன்றி உடலுக்கு தேவையான எதிர்ப்பு சக்தியை இந்த கசாயம் வழங்குகிறது. எனவே சளி இருமல் வந்தால் மட்டும் அல்ல வாரத்தில் ஒருமுறை அல்லது மாதம் ஒருமுறை இந்த கசாயம் செய்து குடிப்பது நல்லது.