வயதான தோற்றத்தை கொடுக்கும் மங்கு? இதனை குணமாக்க முகத்திற்கு இதை அப்ளை செய்யுங்கள்!!
உங்களில் பலருக்கு மங்கு பிரச்சனை இருக்கும்.இவை முக அழகை கெடுப்பதாக இருக்கிறது.இவை இரு கன்னங்களில் தான் கருப்பு நிறத்தில் படர்ந்து விடுகிறது.
இந்த மங்கு பாதிப்பை ஆரம்ப நிலையில் குணப்படுத்தி கொள்வது நல்லது.இல்லையேல் இளம் வயதில் வயதான தோற்றத்தை அடைந்து விடுவோம்.குறிப்பாக பெண்களுக்கு தான் மங்கு அதிகளவில் உருவகிறது.இதற்கு உடல் சார்ந்த பிரச்சனை தான் முக்கிய காரணம்.
மங்கு குணமாக உதவும் எளிய வீட்டு வைத்தியம்:
1)வேப்பிலை
2)மஞ்சள்
1/4 கப் வேப்பிலையை மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து மஞ்சள் கலந்து முகத்திற்கு தடவி வந்தால் மங்கு குறையும்.
1)தயிர்
2)துளசி
மிக்ஸி ஜாரில் 1/4 கப் துளசி போட்டு அரைத்து பேஸ்டாக்கி கொள்ளவும்.பிறகு அதில் தயிர் சேர்த்து நன்கு குழைத்து முகத்திற்கு தடவி வந்தால் மங்கு குறையும்.
1)மஞ்சள்
2)குப்பைமேனி
2)வெப்பாலை
மிக்ஸி ஜாரில் 1/4 கைப்பிடி அளவு குப்பைமேனி இலை,1/4 கைப்பிடி அளவு வெப்பாலை சேர்த்து அரைத்து பேஸ்டாக்கி கொள்ளவும்.
பிறகு 1/4 தேக்கரண்டி கஸ்தூரி மஞ்சள் சேர்த்து குழைத்து முகத்திற்கு தடவி வந்தால் மங்கு குறையும்.