கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்த பெண்! திரும்பி வருகையில் பிணமாக வந்த விபரீதம்! 

கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்த பெண்! திரும்பி வருகையில் பிணமாக வந்த விபரீதம்!

கோவை மாவட்டம் ஆனைமலையை சேர்ந்தவர் அசோக் (33). இவரனின் மனைவி சௌடேஸ்வரி (30). திருமணமாகி 11 ஆண்டுகள் ஆகின்றது. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் அசோக் மற்றும் சௌடேஸ்வரி இருவரும் அதே பகுதியில் உள்ள தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்தனர். அதே தொழிற்சாலையில் திண்டுக்கலை சேர்ந்த முத்துப்பாண்டி (32) என்பவர்  வேலை செய்து வந்தார். முத்துப்பாண்டி திருமணமானவர் என தெரிந்தும் சௌடேஸ்வரி அவருடன் அதிகம் பழகி வந்த நிலையில் காலப்போக்கில் அது கள்ளக்காதலாக மாறியது.

இந்த விவகாரம் அசோக்கிற்கு தெரியவந்தது. அதனால் அவர் மனைவியை கண்டித்துள்ளார். சௌடேஸ்வரி தொடர்ந்து முத்துப்பாண்டியை சந்தித்து வந்ததோடு உல்லாசமாக சுற்றித்திரிந்து வந்தார்.இந்நிலையில் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு முத்துப்பாண்டியனும்  சௌடேஸ்வரியும் திண்டுக்கல் சென்று குடும்ப நடத்தி வந்தனர். பின்பு கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு மேகமும் அருகே கடலில் உள்ள தனியார் தொழிற்சாலைக்கு வேலைக்கு சேர்ந்துள்ளனர்.

அதன்  பின்னர் அந்த பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர். இந்நிலையில் முத்துப்பாண்டி அடிக்கடி மது குடித்துவிட்டு வந்து சௌடேஸ்வரியிடம் தகராறு செய்து வந்தார். இதனால் சௌடேஸ்வரி வாழ்க்கையை வெறுத்து மன உளைச்சலில் இருந்து வந்தார். இதனையடுத்து முத்துப்பாண்டி வீட்டில் இல்லாத நிலையில் தனது வீட்டில் தூக்கு போட்ட தற்கொலை செய்து கொண்டார். மேலும் இந்த சம்பவம் குறித்து மேகமும் போலீசார் தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சௌடேஸ்வரியின்  உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Comment