நுரையீரல் சளியை சட்டுனு விரட்டும் மூலிகை பானம்!

0
123
#image_title

நுரையீரல் சளியை சட்டுனு விரட்டும் மூலிகை பானம்!

நுரையீரலில் சளி கோர்த்துக் கொண்டால் சுவாசிக்க பெரும் சிரமமாக இருக்கும். உடலில் நோய் எதிர்ப்பு ஆற்றல் குறைதல், மழைக்காலம், குளிர்க்காலம் உள்ளிட்ட பல காரணங்களால் ஏற்படும் இந்த சளியை கரைத்து வெளியேற்ற ஆடாதோடை, திப்பிலி உள்ளிட்ட மூலிகை பொருட்களை காய்ச்சி குடிக்க வேண்டும்.

தேவையான பொருட்கள்:-

*ஆடாதோடை இலை
*திப்பிலி
*கற்பூரவல்லி
*மிளகு
*பூண்டு
*மஞ்சள் தூள்
*தேன்

செய்முறை:-

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து 1 1/2 கிளாஸ் தண்ணீர் ஊற்றி 2 ஆடாதோடை இலை, 3 கற்பூரவல்லி இலை மற்றும் 2 திப்பிலி சேர்க்கவும்.

பிறகு அதில் 10 மிளகு, 5 பல் பூண்டு நறுக்கி சேர்க்கவும். பிறகு நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்த மஞ்சள் தூள் 1/4 ஸ்பூன் சேர்க்கவும்.

குறைவான தீயில் இந்த நீரை நிறம் மாறி வரும் வரை கொதிக்க விடவும். தண்ணீர் நன்கு கொதித்து வந்ததும் அடுப்பை அணைத்து ஒரு மூடி போட்டு 5 நிமிடங்களுக்கு மூடி விடவும்.

பிறகு இதை ஒரு கிளஸுக்கு வடிகட்டவும். ஆடாதோடை கசப்பு தன்மை கொண்டவை… எனவே அதில் சிறிது தேன் கலந்து கொள்ளவும்.

இனிப்பு சுவைக்காக வெல்லம், வெள்ளை சர்க்கரை போன்று எதையும் சேர்க்க வேண்டாம். இந்த பானம் நுரையீரலில் தேங்கி கிடக்கும் சளியை அகற்ற உதவுகிறது. சளி இருந்தால் மட்டும் தான் இதை குடிக்க வேண்டும் என்று இல்லை. சளி இல்லாவிட்டாலும் இதை வாரம் ஒருமுறை செய்து குடிக்கலாம். இதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் கிடைக்கும்.