பல்வேறு வசதிகளுடன் களமிறங்கும் புதிய ரயில் நிலையம்!! எங்கு தெரியுமா??
இந்தியாவானது நாடு முழுவதும் மிகப்பெரிய ரயில் போக்குவரத்தை கொண்டுள்ளது. இதில் ஒரு நாளைக்கு 13 ஆயிரத்து 169 பயணிகள் ரயில்களும், எட்டு ஆயிரத்து 479 சரக்கு ரயில்களும் இயக்கப்பட்டு வருகிறது.
பயணிகள் ரயிலில் ஒரு நாளைக்கு கோடிக்கணக்கான நபர்கள் பயணம் செய்து வருகின்றனர். எனவே, பயணிகளின் நலனைக் கருத்தில் கொண்டு ரயில்வே நிர்வாகம் தினம் தோறும் ஏராளமான புதிய புதிய திட்டங்களை கொண்டு வந்துக் கொண்டே இருக்கிறது.
எனவே, இந்தியா முழுவதும் இயங்கும் அனைத்து ரயில் நிலையங்களையும் மேம்படுத்தும் பணிகளை ரயில்வே துறை அறிவித்து, அதற்கு அமிர்த் பாரத் நிலையம் திட்டம் என்று பெயரும் சூட்டியுள்ளது.
இதன்கீழ் இந்தியா முழுவதும் மொத்தம் 508 ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்படும். தமிழகத்தில் மட்டும் பதினெட்டு ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்படும்.
அதாவது ருபாய் 381 கோடி மதிப்பீட்டில் தமிழகத்தில் உள்ள சேலம், கரூர், திருப்பூர், போத்தனூர், தென்காசி, விருதுநகர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், விழுப்புரம், நாகர்கோவில், பெரம்பூர், திருவல்லூர், அரக்கோணம், திருத்தணி, ஜோலார்பேட்டை, கும்மிடிப்பூண்டி, கூடுவாஞ்சேரி மற்றும் செங்கல்பட்டு போன்ற பகுதிகளில் ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்படும்.
இதில் முக்கிய ஒரு ரயில் நிலையமான பெரம்பூரில் தான் பயணிகள் அனைவரும் புறநகர் ரயிலை பிடிப்பதற்காக இறங்குவார்கள். பெரும்பாலும் பெங்களூர், கோவை, கேரளா மற்றும் சென்னை ஆகிய இடங்களில் இருந்து வருபவர்கள் இங்கு இறங்குவார்கள்.
இந்த பெரம்பூர் ரயில் நிலையத்தை மேம்படுத்த வேண்டும் என்று பயணிகள் அனைவரும் கோரிக்கையை எழுப்பி வருகின்றனர். இந்த பெரம்பூர் ரயில் நிலையத்தை மேம்படுத்த சுமார் பதினேழு ஆயிரத்து 86 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
புதிய கூரைகள், தரைத்தளம், பார்க்கிங் வசதி, லிப்ட் வசதி, நகரும் படிக்கட்டுகள், சிசிடிவி கேமராக்கள் என்று பல்வேறு புதிய வசதிகளும் கொண்டு வரப்பட உள்ளது.
எனவே, இந்த பெரம்பூர் ரயில் நிலையம் பயணிகளின் வசதிக்காக ஏராளமான முக்கிய மாற்றங்களை செய்ய பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.