கோலாகலமாக நடந்த மீன் பிடி திருவிழா… போட்டி போட்டு மீன்களை அள்ளி சென்ற மக்கள்!!

0
37

 

கோலாகலமாக நடந்த மீன் பிடி திருவிழா… போட்டி போட்டு மீன்களை அள்ளி சென்ற மக்கள்…

 

சேலம் மாவட்டத்தில் உள்ள கொண்டையம் பள்ளி என்னும் ஊரில் மீன்பிடித் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. இந்த மீன்பிடித் திருவிழாவில் கலந்து கொண்டு மக்கள் அனைவரும் பேட்டி போட்டுக் கொண்டு மீன்களை அள்ளிச் சென்றனர்.

 

சேலம் மாவட்டத்தில் கொண்டையம் பள்ளி என்னும் பகுதியில் சுமார் 60 ஏக்கர் அளவில் பெரிய ஏரி உள்ளது. இந்த பிரம்மாண்டமான ஏரியில் அதிகளவில் மீன்கள் வளர்க்கப்பட்டு வருகின்றது. கட்லா, அயிரை, ஜிலேபி, ரோகு போன்ற ஏராளமான மீன்கள் இந்த ஏரியில் உள்ளது. தற்பொழுது ஏரியில் தண்ணீர் குறைந்து காணப்படுவதால் மீன்பிடித் திருவிழா நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டு பொதுமக்களுக்கு மீன் பிடிக்க அறிவிப்பு வெளியிடப்பட்டது.

 

மீன்களை பிடிக்கும் இந்த மீன்பிடி திருவிழா காலை 6 மணிக்கு தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து ஏராளமான மக்கள் மீன்களை பிடிப்பதற்கு அதிகாலை முதலே ஏரிக்கு வரத் தொடங்கினர். இதனால் கொண்டையம் பள்ளி ஏரி முழுவதும் மக்கள் கூட்டம் அலை மோதியது.

 

இதையடுத்து காலை ஆறா மணிக்கு தொடங்கிய இந்த மீன்பிடித் திருவிழாவில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டு மீன்களை பிடித்தனர். ஒருவருக்கு 12 கிலோ எடையுள்ள மீன் கிடைத்தது. ஏரியில் பிடித்த மீன்களை மக்கள் அவரவர்களது வீட்டுக்கு எடுத்துச் சென்று சமைத்து சாப்பிட்டு மகிழ்ந்தனர். பல ஆண்டுகளுக்கு பிறகு நடத்தப்பட்ட இந்த மீன்பிடித் திருவிழாவை மக்கள் பலரும் கண்டு ரசித்தனர். மேலும் பல ஆண்டுகளுக்கு பிறகு இந்த மீன்பிடித் திருவிழா நடத்தப்பட்டதால் மக்கள் பலரும் மகிழ்ச்சி அடைந்தனர்.