செந்தில் பாலாஜி வழக்கில் புது திருப்பம்!! இவரும் ஆஜராக வேண்டும் சுப்ரீம் கோர்ட் அதிரடி!!
திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில் புது திருப்பமாக சுப்ரீம் கோர்ட் சம்மன் அனுப்பி உள்ளது.
கடந்த அதிமுக ஆட்சியில் ஏராளமான பேருக்கு வேலை வாங்கி தருவதாக கூறி சட்ட விரோதமாக பணம் பரிமாற்றம் செய்த வழக்கில் தற்போதைய திமுக ஆட்சியில் மின்சாரத் துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி அமலாக்க துறையில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு உடல்நிலை பிரச்சனை காரணமாக மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார்.
மேலும் செந்தில் பாலாஜி தரப்பிலிருந்து அமலாக்கத்துறை கைது செய்தது சட்டவிரோதமான ஒன்று என பல்வேறு மேல் முறையீட்டு மனுக்கள் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டன. ஆனால் அவை அனைத்தையும் தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம் அமலாக்கத்துறை காவலில் செந்தில் பாலாஜியை விசாரணை நடத்தலாம் என தெரிவித்துள்ளது.
இந்த தீர்ப்பின் காரணமாக அமலாக்கத்துறை சார்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜியை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை பரிசீலனை செய்த நீதிமன்றம் வருகின்ற 12ஆம் தேதி வரை செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்கலாம் என அனுமதி வழங்கியது.
இதன்படி கடந்த இரண்டு நாட்களாக அமலாக்க துறையினர் செந்தில் பாலாஜியிடம் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். மேலும் குற்றப்பிரிவு போலீசார் செந்தில் பாலாஜி மீது தொடர்ந்து வழக்கில் தமிழக டிஜிபி மற்றும் உள்துறை செயலாளர் நேரில் ஆஜராக சுப்ரீம் கோர்ட் சம்மன் அனுப்பியுள்ளது. அத்துடன் அவர்களுக்கு எவ்வளவு கால அவகாசம் வேண்டும் என்பதை டிஜிபி மற்றும் உள்துறை செயலர் நேரில் வந்து அவகாசம் கேட்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
மேலும் ஆறு மாதம் அவகாசம் வழங்க முடியாது. இதனால் குறைந்த பட்ச கால அவகாசம் வழங்கப்படும் என நீதிபதிகள் கூறினர். மத்திய குற்றப்பிரிவு போலீசார் செந்தில் பாலாஜியின் வழக்கில் தனது இறுதி விசாரணையை நிறைவு செய்ய கால அவகாசம் கோரிய மனுவின் மீதும் சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.