ஸ்ரீமதி வழக்கில் புதிய திருப்பம்! சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவு!
கள்ளக்குறிச்சி கனியாமூரில் இயங்கி வந்த சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளியில் விடுதியில் தங்கி படித்த பிளஸ் டூ மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் கடந்த ஜூலை மாதம் 13ஆம் தேதி உயிரிழந்தார்.மேலும் அவருடைய பெற்றோர் மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி போலீசார்ரிடம் புகார் தெரிவித்தனர்.அந்த புகாரின் பேரில் அந்த மாணவி பயின்று வந்த பள்ளியின் தாளாளர் ,செயலாளர் மற்றும் அங்கு பணிபுரிந்து வரும் இரண்டு ஆசிரியைகள் உட்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட ஐந்து பேரும் ஜாமீன் கேட்டு விழுப்புரத்தில் உள்ள மகளிர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.அந்த மனு தள்ளுப்படி செய்யப்பட்டது.இந்நிலையில் அவர்கள் ஐந்து பெரும் மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்தனர்.அந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் கைது செய்யப்பட்ட ஐந்து பேருக்கும் நிபந்தனை ஜாமீன் வழங்கியது.
இந்நிலையில் ஜாமீன் நிபந்தனைகள் தளர்த்த வேண்டும் என்று ஐந்து பெரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.அதனை விசாரித்த நீதிபதிகள் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் காலை 10.30மணிக்கு விழுப்புரம் சிபிசிஐடி போலீசார் முன்பு ஆஜராகி கையெழுத்து போட வேண்டும் என உத்தரவிட்டனர்.