தீராத நெஞ்சு சளி? இதை 1 கிளாஸ் குடித்தால் 5 நிமிடத்தில் சளி முழுவதும் கரைந்து வெளியேறி விடும்!!

0
171
#image_title

தீராத நெஞ்சு சளி? இதை 1 கிளாஸ் குடித்தால் 5 நிமிடத்தில் சளி முழுவதும் கரைந்து வெளியேறி விடும்!!

பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவரையும் எளிதில் பாதிக்கும் நோய்களில் ஒன்று சளி. இவை சாதாரன நோய் பாதிப்பு என்றாலும் அலட்சியப் படுத்தினால் நாளடைவில் தீராத நெஞ்சு சளி பாதிப்பாக மாறி விடும்.

நெஞ்சு சளி அறிகுறி:-

*தொண்டை வலி

*தொண்டை புண்

*நீஞ்சு அனத்தம்

*தலைவலி

*மூக்கு ஒழுகுதல்

*மூக்கடைப்பு

*மூச்சு விடுதலில் சிரமம்

*வறட்டு இருமல்

*உடல் சோர்வு

தேவையான பொருட்கள்:-

*கொள்ளு பருப்பு – 100 கிராம்

*சீரகம் – 1 தேக்கரண்டி

*கருப்பு மிளகு – 1 தேக்கரண்டி

*கொத்தமல்லி விதை – 1/2 தேக்கரண்டி

*கருவேப்பிலை – 1 கொத்து

*கொத்தமல்லி இலை – சிறிதளவு

*பூண்டு – 5 பற்கள்

*தக்காளி – 1

*புளி – சிறு துண்டு

*உப்பு – தேவையான அளவு

*மஞ்சள் தூள்- 1/4 தேக்கரண்டி

*பெருங்காயத்தூள் – 1 சிட்டிகை

*நல்லெண்ணெய் – 3 தேக்கரண்டி

*கடுகு – 1/2 தேக்கரண்டி

*உளுந்து பருப்பு – 1/4 தேக்கரண்டி

*வர மிளகாய் – 2

செய்முறை:-

முதலில் ஒரு பாத்திரம் எடுத்து அதில் 100 கிராம் கொள்ளு பருப்பு போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும். பின்னர் இதை நன்கு சுத்தம் செய்து ஒரு பாத்திரத்திற்கு மாற்றிக் கொள்ளவும்.

அடுத்து அடுப்பில் ஒரு வாணலி வைத்து கொள்ளு பருப்பை சேர்த்து மிதமான தீயில் வாசனை வரும் வரை வறுக்கவும்.பின்னர் அடுப்பை அணைத்து அதை நன்கு ஆற விடவும்.

ஒரு மிக்ஸி ஜார் எடுத்து அதில் ஆறவைத்துள்ள கொள்ளு பருப்பை சேர்த்து கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும். பிறகு 1 தக்காளி, 5 பல் பூண்டு, 1 தேக்கரண்டி சீரகம், 1 கொத்து கருவேப்பிலை, 1 தேக்கரண்டி கொத்தமல்லி விதை சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.

பின்னர் இதை ஒரு பாத்திரத்திற்கு மாற்றிக் கொள்ளவும். அதில் ஊறவைத்துள்ள புளி கரைசலை சேர்த்து கொள்ளவும். பின்னர் அதில் 3 டம்ளர் தண்ணீர், தேவையான அளவு உப்பு மற்றும் 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள் சேர்த்து கலந்து கொள்ளவும்.

அடுத்து அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் 3 தேக்கரண்டி நல்லெண்ணெய் ஊற்றிக் கொள்ளவும். அவை சூடேறியதும் அதில் 1/2 தேக்கரண்டி கடுகு, 1/4 தேக்கரண்டி உளுந்து பருப்பு, 2 வர மிளகாய், 1 கொத்து கறிவேப்பிலை சேர்த்து பொரிய விடவும்.

பின்னர் கரைத்து வைத்துள்ள கொள்ளு கலவையை கடாயில் ஊற்றி கொதிக்க வைக்கவும். இவை நன்கு நுரைத்து வரும் வரை காத்திருந்து அடுப்பை அணைக்கவும். பின்னர் வாசனைக்காக சிறிதளவு நறுக்கிய கொத்தமல்லி இலைகளை சேர்த்து கொள்ளவும். இந்த கொள்ளு ரசத்தை சூடாகா இருக்கும் பொழுது பருகினால் மார்பில் தேங்கி கிடந்த சளி முழுவதும் கரைந்து வெளியேறி விடும்.

Previous articleவீடு மாற்றும் போது இது போல் செய்திருக்கிறீர்களா? இல்லையென்றால் இனிமேல் கண்டிப்பாக செய்யவும்!!
Next articleவருவாய் துறையில் வேலைவாய்ப்பு!! மாதம் ரூ.2,25,000/- ஊதியம்!! இந்த அசத்தல் வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!!