தீராத நெஞ்சு சளி? அப்போ இதை செய்து குடிங்க போதும்!! 1 மணி நேரத்தில் மொத்த சளியும் கரைந்து வெளியேறி விடும்!!

0
32
#image_title

தீராத நெஞ்சு சளி? அப்போ இதை செய்து குடிங்க போதும்!! 1 மணி நேரத்தில் மொத்த சளியும் கரைந்து வெளியேறி விடும்!!

மழைக்காலங்களில் நிகழக்கூடிய காமன் வைரஸ் தொற்று சளி, இருமல். இதை சாதாரண நோய் பாதிப்பு என்று அலட்சியப்படுத்துவதால் தான் அவை நாளடைவில் மார்பு சளியாக மாறி நம்மை படுத்தி எடுக்கிறது. இதனால் மூச்சு விடுதலில் சிரமம் சூழல் உருவாகி விடும்.

மார்பு சளி அறிகுறி:-

*தொண்டை வலி

*தொண்டை புண்

*நீஞ்சு அனத்தம்

*தலைவலி

*மூக்கு ஒழுகுதல்

*மூக்கடைப்பு

*மூச்சு விடுதலில் சிரமம்

*வறட்டு இருமல்

*உடல் சோர்வு

தேவையான பொருட்கள்:-

*தூதுவளை – 10 இலைகள்

*மிளகு – 1 தேக்கரண்டி

*பூண்டு – 6 பற்கள்

*சீரகம் – 1/4 தேக்கரண்டி

*மஞ்சள் தூள் – சிட்டிகை அளவு

*பெருங்காயத்தூள் – சிட்டிகை அளவு

*தக்காளி – 1

*புளி – சிறிதளவு

*உப்பு – தேவையான அளவு

*எண்ணெய் – 1 தேக்கரண்டி

*வரமிளகாய் – 2

*கொத்தமல்லி தழை – சிறிதளவு

செய்முறை:-

முதலில் ஒரு பாத்திரம் எடுத்து அதில் புளியை ஊறவைத்து கொள்ளவும். 10 முதல் 15 நிமிடங்கள் கழித்து புளி தோலை நீக்கி விட்டு அதில் தக்காளியை பிழிந்து கொள்ளவும்.

அடுப்பில் ஒரு வாணலி வைத்து அதில் வரமிளகாய், மிளகு மற்றும் பூண்டு சேர்த்து வாசனை வரும் வரை வறுத்து கொள்ளவும். பின்னர் அதனை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து அதோடு தூதுவளை இலைகளை போட்டு நன்கு அரைத்து கொள்ளவும்.

அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி அவை சூடேறியதும் அரைத்த விழுது, பெருங்காயத்தூள் மற்றும் மஞ்சள் ஆகியவற்றை சேர்த்து வதக்கவும்.

பிறகு தயார் செய்து வைத்துள்ள புளி, தக்காளி கரைசலை சேர்க்கவும். தேவையான அளவு உப்பு சேர்த்து மிதமான தீயில் வேக விடவும். பின்னர் ஒரு கொதி வந்ததும் அடுப்பை அணைத்து வாசனைக்காக சிறிதளவு கொத்தமல்லி இலைகளை சேர்க்கவும். இதை ஒரு பவுலில் ஊற்றி சூடாக இருக்கும் பொழுது ஸ்பூன் பயன்படுத்தி பருகவும். இவ்வாறு செய்தால் மார்பில் தேங்கி கிடந்த சளி முழுவதும் கரைந்து வெளியேறி விடும்.