உடல் எடையை சட்டுனு குறைய வைக்கும்.. சிம்பிள் பானம்!

Photo of author

By Divya

உடல் எடையை சட்டுனு குறைய வைக்கும்.. சிம்பிள் பானம்!

இன்றைய கால உணவுமுறை மிகவும் மோசமாக இருக்கின்றது. ஆரோக்கியம் நிறைந்த உணவு கிடைப்பது என்பது அரிதாகி விட்டது. தினமும் எண்ணெய் உணவுகள், கொழுப்பு உணவுகளை சாப்பிட்டு வந்தால் உடல் எடை மளமளவென கூடி விடும்.

அதுமட்டும் இன்றி உடல் உழைப்பு இல்லாமல் ஒரே இடத்தில் அமர்ந்து வெகு நேரம் வேலை பார்த்தல், அதிக நேரம் தூங்குதல் போன்றவற்றாலும் உடல் எடை கூடிவிடும். இதை குறைக்க ராகி கஞ்சி குடிப்பது நல்லது.

தேவையான பொருட்கள்:-

1)ராகி
2)நாட்டு சர்க்கரை
3)தயிர்
4)பீட்ரூட்

செய்முறை…

1/4 கப் ராகி எடுத்து மிக்ஸியில் அரைத்து பொடியாக்கி கொள்ளவும்.

இந்த ராகி மாவில் கஞ்சி காய்ச்ச வேண்டும். அதற்கு முதலில் அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து 1 கப் தண்ணீர் ஊற்றி அரைத்த ராகி மாவு 3 ஸ்பூன் சேர்த்து கலந்து கொதிக்க விடவும்.

ராகி கஞ்சி கொதிக்கும் தருணத்தில் தேவையான அளவு நாட்டு சர்க்கரை சேர்த்து கலந்து விடவும்.

பிறகு அடுப்பை அணைத்து ராகி கஞ்சியை ஆற விடவும்.

அடுத்து சிறிது தயிரை மிக்ஸியில் போட்டு அரைத்து.. ராகி கஞ்சியில் ஊற்றி கலந்து விடவும்.

அடுத்து சேர்க்க வேண்டிய முக்கியமான பொருள் பீட்ரூட்… இதை தோல் நீக்கி நறுக்கி அரைக்கவும். இந்த பீட்ரூட் சாறை வடிகட்டி ராகி கஞ்சியில் சேர்த்து கலந்து குடிக்கவும்.

இதை தினமும் குடித்து வந்தால் உடலில் தேங்கி கிடந்த ஊளைச் சதை கரைந்து உடல் கட்டுக்கோப்பாக இருக்கும்.