ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு போதும் ஒட்டுமொத்த கரப்பான் பூச்சி கூட்டமும் தெறித்தோடும்!

ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு போதும் ஒட்டுமொத்த கரப்பான் பூச்சி கூட்டமும் தெறித்தோடும்!

பெரும்பாலானோர் வீட்டின் சமையலறையில் கரப்பான் பூச்சி நடமாட்டம் இருக்கும். இவை சமையலறையில் உள்ள உணவுகளை உண்டு வாழ்ந்து வருகிறது. இந்த கரப்பான் பூச்சிகள் அதிகளவு பாக்டீரியாக்களை பரப்புவதால் அவைகளால் நம் உடலுக்கு தேவையற்ற உபாதைகள் ஏற்படும்.

எனவே இந்த கரப்பான் பூச்சிகளின் நடமாட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள ட்ரிக்ஸை ட்ரை பண்ணுங்கள்.

தேவையான பொருட்கள்:-

1)வினிகர்
2)எலுமிச்சை சாறு
3)தண்ணீர்

செய்முறை:-

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்தவும். பிறகு அடுப்பை அணைத்து விட்டு அதில் ஒரு தேக்கரண்டி வினிகர் மற்றும் ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலந்து வீட்டில் கரப்பான் பூச்சி பதுங்கி இருக்கும் இடங்களில் துடைத்து விடவும்.

இந்த வாசனையால் கரப்பான் பூச்சி தெறித்தோடி விடும்.

தேவையான பொருட்கள்:-

1)பால இலை

செய்முறை:-

பால இலை ஒரு கைப்பிடி அளவு எடுத்து உலர்த்திக் கொள்ளவும். இதை மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து நைஸ் பவுடராக்கி கரப்பான் பூச்சி நடமாட்டம் இருக்கும் இடங்களில் தூவி விட்டால் அதன் தொல்லை நீங்கும்.