80 வயதில் 20 வயது இளமை கிடைக்க ‘பப்பாளி’ ஒன்று போதும்!

0
92
#image_title

80 வயதில் 20 வயது இளமை கிடைக்க ‘பப்பாளி’ ஒன்று போதும்!

இன்றைய காலத்தில் 30 வயதை கடந்து விட்டாலே பெரும்பாலான பெண்களுக்கு முகத்தில் சுருக்கம் ஏற்பட்டு விடுகிறது. இதற்கு முக்கிய காரணம் முகத்திற்கு அதிகளவு இரசாயனம் நிறைந்த க்ரீம்கள் பயன்படுத்துவது தான். அதுமட்டும் இன்றி மற்றம் கண்ட உணவுமுறை பழக்கமும் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. சருமத்தில் ஏற்படும் சுருக்கம், வறட்சி நீங்கி முகம் பொலிவாக இருக்க பப்பாளி சோப் தயாரித்து பயன்படுத்துங்கள்.

தேவையான பொருட்கள்:-

1)பப்பாளி துண்டுகள் – 1 கப்
2)கற்றாழை ஜெல் – 1/2 கப்
3)காஸ்ட்டிக் சோடா
4)தேங்காய் எண்ணெய்
5)சோப் மோல்ட் – 1

தயாரிக்கும் முறை:-

ஒரு கப் தோல் நீக்கிய பப்பாளி மற்றும் 1/2 கப் ப்ரஸ் கற்றாழை ஜெல் எடுத்துக் கொள்ளவும்.

இவை இரண்டையும் ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மைய்ய அரைத்துக் கொள்ளவும்.

இதை ஒரு கிண்ணத்திற்கு வடிகட்டி வைத்துக் கொள்ளவும். பிறகு ஒரு பிளாஸ்டிக் கிண்ணத்தில் 1 கப் காஸ்ட்டிக் சோடா சேர்த்து 1 கப் தண்ணீர் ஊற்றி கரண்டி கொண்டு கலந்து விடவும்.

பிறகு அரைத்து வைத்துள்ள பப்பாளி + கற்றாழை சாற்றை அதில் சேர்த்து நன்கு கலந்து விடவும்.

அதன் பின்னர் 6 கப் தேங்காய் எண்ணெய் ஊற்றி நன்கு கலக்கி விடவும். இதை அனைத்தையும் நன்கு கலந்து சோப் மோல்டில் ஊற்றி 8 மணி நேரத்திற்கு நிழலில் வைக்கவும்.

இந்த பப்பாளி சோப்பை சருமத்திற்கு பயன்படுத்தி வந்தால் சரும சுருக்கம், வறட்சி நீங்கி இளமை தோற்றம் கிடைக்கும்.