இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவும் அற்புத கஷாயம்!! 100% அனுபவ உண்மை!!

Photo of author

By Divya

இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவும் அற்புத கஷாயம்!! 100% அனுபவ உண்மை!!

Divya

இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவும் அற்புத கஷாயம்!! 100% அனுபவ உண்மை!!

இன்றைய உலகில் பெரும்பாலானோர் சர்க்கரை(நீரழிவு) நோயால் அவதிப்பட்டு வருகின்றனர். பெரியவர்கள், இளம் வயதினர், கை குழந்தைகள் என்று அனைவருக்கும் இந்த பாதிப்பு எளிதில் ஏற்பட்டு விடுகிறது. இதை ஆரம்ப நிலையில் கண்டறிந்து கட்டுக்குள் வைத்துக் கொள்வது மிகவும் முக்கியம்.

1)சர்க்கரை நோய் உருவாகக் காரணங்கள்:-

*பரம்பரை நோய்

*அதிகளவு இனிப்பு எடுத்துக் கொள்ளுதல்

*உடல் பருமன்

*மன அழுத்தம்

*அடிக்கடி கர்ப்பம் அடைதல்

*உயர் இரத்த அழுத்தம்

*இரத்த மிகை கொழுப்பு

*சினைப்பை நீர்க்கட்டி

*சோம்பலான வாழ்க்கை முறை

2)சர்க்கரை நோய் அறிகுறிகள்:-

*அடிக்கடி சிறுநீர் வெளியேறுதல்

*அதிகப்படியான உடல் சோர்வு

*தண்ணீர் தாகம் அதிகரித்தல்

*கண் பார்வை மங்குதல்

*அதிகப்படியான தலைவலி

3)இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கும் கஷாயம்:-

தேவையான பொருட்கள்:-

*ஓமம் – 1/2 தேக்கரண்டி

*இஞ்சி – 1/2 இன்ச்

*பட்டை – 1

*வெந்தயம் – 1/2 தேக்கரண்டி

*கருவேப்பிலை – 2 கொத்து

மூலிகை செய்முறை:-

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் 1 1/2 டம்ளர் தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும். பின்னர் அதில் 1/2 தேக்கரண்டி ஓமம், 1 தூண்டு பட்டை, 1/2 தேக்கரண்டி வெந்தயம், 1/2 இன்ச் இஞ்சி, 2 கொத்து கருவேப்பிலை சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.

1 1/2 கிளாஸ் தண்ணீர் சுண்டி 3/4 கிளாஸாக வரும் வரை கொதிக்க விட்டு அடுப்பை அணைக்கவும். பின்னர் இதை ஒரு தட்டு கொண்டு மூடி விடவும்.

ஐந்து நிமிடங்களுக்கு பின்னர் ஒரு டம்ளருக்கு வடிகட்டி பருகவும். இந்த கஷாயத்தை காலை, மாலை என்று எந்த நேரத்தில் வேண்டுமாலும் செய்து பருகலாம். இந்த பானம் இரத்தத்தில்உள்ள சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க பெரிதும் உதவியாக இருக்கிறது.