அதிரடி இது முதல் அடி! தமிழகத்தில் இன்று தவெக ஆலோசனைக் கூட்டம்!

0
305
#image_title

அதிரடி இது முதல் அடி!
தமிழகத்தில் இன்று தவெக ஆலோசனைக் கூட்டம்!

தமிழகத்தில் கட்சிப் பணியை துவங்கிய தமிழக வெற்றிக் கழகம் இன்று, முதல் ஆலோசனைக் கூட்டத்தை துவங்குகிறது. தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தலைமையிலான இந்த ஆலோசனைக் கூட்டத்தில் விஜய் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பல்வேறு தரப்பினரின் கருத்துக்களின் அடிப்படையில் கட்சியின் பெயரில் இருந்த பிழை திருத்தம் செய்யப்பட்டு ஆலோசனைக் கூட்ட அறிக்கையில் கட்சியின் பெயர் தமிழக வெற்றிக் கழகம் என திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஆலோசனைக் கூட்டத்தில் உறுப்பினர் சேர்க்கை மற்றும் உட்கட்சி கட்டமைப்பு விரிவாக்கம் தொடர்பாக கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

கூட்டம் சென்னை பனையூரில் உள்ள தலைமை நிலைய செயலக அலுவலகத்தில் காலை 9.00 மணி அளவில் நடைபெறுகிறது. மாவட்ட கழக நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர். மேலும் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் GOAT படத்தில் நடித்துவரும் விஜய் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Previous articleபாஜகவின் சதி திட்டத்தை ஒழிப்போம்! தமிழகம் முழுவதும் விசிக ஆர்ப்பாட்டம்!
Next articleதிமுக ஆட்சியில் வெறும் பேச்சு மட்டும் தான்… எடப்பாடி பழனிச்சாமி ஆவேசம்!