என்னதான் காதல் சர்ச்சைகளில் சிக்கினாலும் தமிழ் திரையுலகில் நடிகை நயன்தாரா லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டு தான் இருக்கின்றார். ஆண் நடிகர்களுக்கு இணையான சம்பளமும் பெண்ணுக்கே உரிய கதாபாத்திரங்களிலும் நடித்து பெரிய வெற்றி பெற்றுள்ளார்.
இவர் முற்காலங்களில் பல சர்ச்சைகளில் சிக்கி இருந்தாலும் இவருக்கென தனி ரசிகர் கூட்டம் இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் சமீபகாலத்தில் என்னுடைய காதலரான விக்னேஷ் சிவன் உடன் வெளிநாடுகள் சென்று புகைப்படங்கள் இணையங்களில் வைரலாக வெளியிட்டார்.
ஆனால் இவர் தற்பொழுது நடிக்கும் படங்களில் கவர்ச்சி இல்லாமல் கதைக்கு முக்கியத்துவமும் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவமும் கொடுத்து நடிப்புக்கு பெருமை சேர்க்கிறார். அவ்வகையில் தன்னுடைய கதாபாத்திரத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படங்களான அறம், கோலமாவு கோகிலா, மாயா, டோரா போன்ற படங்கள் நல்ல கதைககளாக அமைந்திருந்தது.
ஆனால் இவரும் மற்ற நடிகையர் போல் கமர்ஷியல் படங்களில் தன் கவர்ச்சியை வேண்டுமான அளவு கொடுத்திருக்கிறார். அதுமட்டுமல்லாமல் இவர் நெருக்கமான காட்சிகளிலும் நடித்து இருந்தார். அவ்வகையில் இவர் அஜித்துடன் நடித்த பில்லா படத்தில் டு பீஸ் உடையிலும், ஆரம்பம் படத்தில் சொட்டச் சொட்ட அட்டகாசமாக தன் கவர்ச்சியை காட்டி உள்ளார்.
இதுகுறித்து தொகுப்பாளர் ஒருவர் படத்தின் நிகழ்ச்சியின் பொழுது நயன்தாராவை இந்த மாதிரியான கவர்ச்சி உடைகளில் பார்க்கும்பொழுது உங்களுக்கு எப்படி இருந்தது என்று கேள்வி எழுப்பி உள்ளார். அதற்கு நடிகர் அஜித் அவர்கள் அது அவருடைய வேலை. இயக்குனர் என்ன சொல்கிறாரோ அதைதான் அவர் செய்கிறார் அதில் நான் தலையிட முடியாது என்று ஜென்டில்மேன் பதிலை கொடுத்துள்ளார்.
இதற்காக ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை தல அஜித் பெற்றார். சில பெண்களுக்கு மரியாதை கொடுக்கும் வகையில் சமீபத்தில் மேற்கொண்ட பார்வை என்னும் படத்தில் நடித்து இருந்தார்.