தேனி மாவட்டத்தில் அரசுப் பணி! கல்வித்தகுதி என்ன யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்!!

0
43
#image_title

தேனி மாவட்டத்தில் அரசுப் பணி! கல்வித்தகுதி என்ன யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்!!

தேனி மாவட்டத்தின் சமூக பாதுகாப்புத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் அலுவலகத்தில் காலியாக இருக்கும் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்பொழுது வெளியாகி இருக்கின்றது. இந்த பணிக்கான கல்வித்தகுதி என்ன, ஊதிய விவரம் ஏன்ன, விண்ணப்பிப்பது எவ்வாறு என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

பணி பற்றி விவரங்கள்…

அலுவலகத்தின் பெயர்…

தேனி மாவட்ட சமூக பாதுகாப்புத் துறை அலுலகம்

பணியின் பெயர்…

இந்த அலுவலகத்தில் தற்பொழுது காலி இருக்கும் சமூகப் பணியாளர் பணியை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.

கல்வித்தகுதி…

சமூகப் பணியாளர் பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் சமூகவியல் இளங்கலை பட்டம் அல்லது சமூகப்பணி இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். கணினி பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டியது அவசியம்.

குழந்தைகள் நலன், சமூக நலன் தொடர்பான பணிகளில் வேலை செய்த அனுபவம் உள்ள நபர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

வயது வரம்பு…

சமூக பணியாளர் பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் அனைவரும் 40 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

ஊதிய விவரம்…

சமூக பணியாளர் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் தகுதியுள்ள பணியாளர்களுக்கு மாதம் 18536 ரூபாய் மாதச் சம்பளமாக வழங்கப்படும்.

பணி வகை…

சமூக பணியாளர் பணி ஓராண்டு கால ஒப்பந்தம் அடிப்படையிலான பணியாகும்.

தேர்வு செய்யப்படும் முறை…

தகுதியுள்ள நபர்கள் அனைவரும் நேர்முகத்தேர்வு முறையில் சமூக பணியாளர் கணக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை…

தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் https://theni.nic.in/ என்ற இணையதளத்தை கிளிக் செய்து விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதில் கூறப்பட்டுள்ள விவரங்களை பூர்த்தி செய்து அஞ்சலில் அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி…

பூர்த்தி செய்த விண்ணப்பத்தை கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம், ஒருங்கிணைந்த அரசு பல்துறை வளாகம் II, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், தேனி – 625531

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி…

தகுதியுள்ள நபர்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து 15.11.2023 தேதிக்குள் மேற்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

வேலை பற்றிய கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ள https://cdn.s3waas.gov.in/s39a96876e2f8f3dc4f3cf45f02c61c0c1/uploads/2023/10/2023103155.pdf என்ற இணைப்பை கிளிக் செய்ய வேண்டும்.