சினிமாவில் வேற மாதிரியாக அவதாரம் எடுக்கும் நடிகை சுகன்யா

Photo of author

By Parthipan K

சினிமாவில் வேற மாதிரியாக அவதாரம் எடுக்கும் நடிகை சுகன்யா :-

9களில் முன்னணி நடிகையாக பல வந்தவர் நடிகை சுகன்யா. 1992 ஆம் ஆண்டு இயக்குனர் பாரதிராஜா அவர்கள் இயக்கத்தில் நெப்போலியன் அவர்களுடன் ஜோடி சேர்ந்து “புது நெல்லு, புது நாத்து” என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் பிறகு மலையாளம், கன்னடம் என பல படங்களில் கதாநாயகியாக நடித்து மிகவும் பிரபலமானார். சின்ன கவுண்டர், திருமதி பழனிசாமி, மகாநதி, இந்தியன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து நல்ல நடிகை என்று தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல பெயரை பெற்றார் நடிகை சுகன்யா.

நடிகை சுகன்யா, ஸ்ரீதர் ராஜகோபாலன் என்பவரை 2002ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இருப்பினும், திருமணத்திற்கு பிறகு நடிகை சுகன்யா அவர்கள் தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்தியதால் கணவருக்கும் நடிகை சுகன்யா அவர்களுக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவியது. இதையடுத்து தனது கணவர் ராஜகோபாலனை நடிகை சுகன்யா  விவாகரத்து செய்தார்.

சினிமாவில் நடிப்பதை சிறிது காலம் ஓரங்கட்டி வைத்த நடிகை சுகன்யா, சீரியல் நடிக்க தொடங்கினார். அவர் நடிப்பில் ஒளிபரப்பான “ஆனந்தம்” சீரியல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்தை பெற்றது. நடிகை சுகன்யா அவர்கள் தமிழில் சேரன் அவர்கள் இயக்கத்தில் வெளியான “திருமணம்” என்று படத்தில் இறுதியாக நடித்தார்.

இதனிடையே நடிகை சுகன்யா மீண்டும் சினிமாவில் ஒரு வலம்வர இருக்கிறார். ஆனால் இந்த முறை நாயகியாக இல்லாமல் பாடலாசிரியராக அறிமுகமாக உள்ளார். இயக்குனர் சுரேஷ்கா பாபு என்பவரும், இசையமைப்பாளர் சரத் என்பவரும் மலையாள படம் ஒன்றில் நடிகை சுகன்யா பாடல் எழுத வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். இதற்கு சம்மதம் தெரிவித்து ஒரு பாடலையும் நடிகை சுகன்யா அவர்கள் எழுதிக் கொடுத்துள்ளார்.