நடிகை வனிதாவிற்கு நேர்ந்த சோகம் என்ன தெரியுமா?

0
154

நடிகர் விஜயகுமாருக்கும் பழம்பெரும் நடிகை மஞ்சளாகவிற்கும் மூத்த மகளான நடிகை வனிதா பிக் பாஸ் மூலம் தமிழக திரையுலகத்திற்கு ரீஎன்ட்ரீ கொடுத்தார். இவர் பிக்பாஸில் இருந்தே மக்களிடம் மிகவும் வைரலாகி வருகிறார். இவருடைய வெளிப்படையான பேச்சு, சட்டென்று எடுக்கும் முடிவுகள், இரண்டுக்கும் மேற்பட்ட திருமணங்கள், கம்பீரமான தோற்றம் இதற்குக் காரணம் எனலாம். மேலும் இவர் விஜய் டிவியில் நடத்தப்பட்ட குக் வித் கோமாளி என்னும் ரியாலிட்டி ஷோவில் கலந்துகொண்டு டைட்டிலை வின் செய்தார். அதோடு அவருடைய சமையல்களும் பிரபலமாகின.

மூன்று குழந்தைகளுக்கு அம்மாவான இவர் தற்பொழுது தன் கடைசி இரு மகள்களுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் இவருக்கு நேர்ந்த இரண்டு திருமணங்களும் தோல்வியில் முடிந்ததால் தற்பொழுது பீட்டர் பால் என்பவரை மறுமணம் செய்து உள்ளார். ஆனால் பீட்டர்பால் அவர்களுக்கு ஏற்கனவே ஹெலன் என்பவருடன் திருமணமாகி குழந்தைகள் உள்ளது. இந்நிலையில் ஹெலெனிடம் இருந்து விவாகரத்து பெறாமல் வனிதாவும் பீட்டர்பாலும் கிறித்துவ முறையில் எளிமையாக திருமணம் நடத்திக் கொண்டனர். இதை நெட்டிசன்கள் மிகவும் வைரலாக்கி வந்த நிலையில் பீட்டர் பாலின் மூத்த தாரமான ஹெலனுக்கு ஆதரவாக நடிகைகள் லட்சுமி ராமகிருஷ்ணன்,கஸ்தூரி போன்ற திரையுலக பிரபலங்கள் இருந்த நிலையில் நடிகை வனிதா அவர்களை வார்த்தைகளால் சமூக ஊடங்களில் விளாசி வந்தார்.

இந்நிலையில் நடிகை வனிதா,பீட்டர்பால் மற்றும் தன் இரு மகள்களுடன் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த நிலையில் பீட்டர்பாலுக்கு கடந்த சில நாட்களாக உடல் நலம் சரியில்லாமல் இருந்து வந்தது. எனவே அவரை நெஞ்சுவலி காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Previous articleஇனி ஊரடங்கு இல்லை! இ-பாஸ் தேவையில்லை! உத்தரவு பிறப்பித்த முதல்வர்!
Next article5 மாதங்களுக்குப் பிறகு தொடங்கிய பொது போக்குவரத்து சேவை..!! மாநில அரசின் அதிரடி அறிவிப்பு!!