வாய்ப்புண் குணமாக தேங்காய் பாலில் இந்த பொருளை சேர்த்து பருகுங்கள்!

Photo of author

By Divya

வாய்ப்புண் குணமாக தேங்காய் பாலில் இந்த பொருளை சேர்த்து பருகுங்கள்!

வாயில் புண் ஏற்பட முக்கிய காரணம் வயற்றில் அல்சர் பிரச்சனை இருப்பது தான். உணவை அலட்சியப்படுத்துதல், உடலில் நீர்ச்சத்து குறைபாடு, பித்தம், கார உணவு உள்ளிட்ட காரணங்களால் வாய்ப்புண், வயிற்றுப்புண் பாதிப்பு ஏற்படுகிறது.

இந்த வாய்ப்புண் பாதிப்பை வீட்டில் உள்ள பொருட்களை வைத்து குணப்படுத்திக் கொள்ளும் முறையை தற்பொழுது தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்…

*தேங்காய்
*மணத்தக்காளி கீரை பொடி
*சீரகம்

ஒரு கப் தேங்காய் துண்டை அரைத்து பால் எடுத்துக் கொள்ளவும். இந்த தேங்காய் பாலில் 1 ஸ்பூன் மணத்தக்காளி கீரை பொடி மற்றும் 1 ஸ்பூன் சீரகப் பொடி சேர்த்து பருகவும்.

இவ்வாறு தேங்காய் பால் செய்து சாப்பிட்டால் வாய்ப்புண் மட்டுமல்ல வயிற்றில் உள்ள புண்ணும் ஆறும்.

மணத்தக்காளி கீரையை உலர்த்தி பொடியாக்கியும் பயன்படுத்தலாம்… நாட்டு மருந்து கடையில் மணத்தக்காளி கீரை பொடி கிடைக்கும்… அதை வாங்கியும் பயன்படுத்தலாம்.

தேவையான பொருட்கள்…

*தேங்காய் பால்
*பாகல் இலை பொடி
*வெந்தயம்

ஒரு கப் தேங்காய் துண்டை அரைத்து பால் எடுத்துக் கொள்ளவும். இந்த தேங்காய் பாலில் 1 ஸ்பூன் பாகல் இலை பொடி மற்றும் 1 ஸ்பூன்வெந்தயப் பொடி சேர்த்து பருகவும்.

இவ்வாறு தேங்காய் பால் செய்து சாப்பிட்டால் வாய்ப்புண் மட்டுமல்ல வயிற்றில் உள்ள புண்ணும் ஆறும்.

வெந்தயத்தை வறுத்து பொடியாக்கி கொள்ளவும். பாகல் இலையை உலர்த்தி பொடியாக்கி கொள்ளவும்.