அடேங்கப்பா.. உலர் திராட்சையில் தேநீர் செய்து பருகினால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா?

Photo of author

By Divya

அடேங்கப்பா.. உலர் திராட்சையில் தேநீர் செய்து பருகினால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா?

தினமும் உலர் வகை பழங்களை சாப்பிடுவதால் உடலுக்கு தேவையான சத்துக்கள் எளிதில் கிடைத்து உடல் ஆரோக்கியமாக இருக்கும். அந்த வகையில் உலர் திராட்சையை வைத்து தேநீர் செய்து பருகி வந்தோம் என்றால் உடலுக்கு பல்வேறு ஆரோக்கிய நமைகள் கிடைக்கும்.

உலர் திராட்சையின் ஊட்டச்சத்துக்கள்:-

ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், நார்ச்சத்து, இரும்புச்சத்து, வைட்டமின்கள்.

தினமும் 1 கிளாஸ் உலர் திராட்சை தேநீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்:-

உலர் திராட்சை தேநீர் செய்வது எப்படி?

முந்தின நாள் இரவு ஒரு கிண்ணத்தில் 10 உலர் திராட்சையை போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி ஊற விடவும். மறுநாள் காலையில் அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் உலர் திராட்சை ஊற வைத்த தண்ணீரை ஊற்றி கொதிக்க வைத்து வடிகட்டி பருக வேண்டும். சுவைக்காக சர்க்கரை, வெல்லம், தேன் போன்றவற்றை பயன்படுத்தக் கூடாது.

உலர் திராட்சை தேநீர் நன்மைகள்:-

**உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும்.

**உடலை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ள உதவுகிறது.

**உடலில் உள்ள தேவையில்லாத நச்சு கழிவுகள் வெளியேறும்.

**உடலில் உள்ள முக்கிய உறுப்பான கல்லீரலையும் பாதுகாக்க இவை உதவுகிறது.

**உடலை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ள உதவுகிறது.

**இரத்தம் தொடர்பான பாதிப்புகளான இரத்த சோகை, இரத்த அழுத்தம், இரத்த கொதிப்பு உள்ளிட்டவற்றை குணமாக்க உதவுகிறது.

**பற்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் வாய் துர்நாற்றத்தை கட்டுப்படுத்தவும் பெரிதும் உதவுகிறது.

**கண் மற்றும் சருமம் தொடர்பான பிரச்சினை நீங்க உதவுகிறது.

**இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்க உதவுகிறது.

**புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுக்க பெரிதும் உதவுகிறது.