அடேங்கப்பா.. முருங்கை கீரையில் சூப் செய்து பருகினால் உடலுக்கு இத்தனை நன்மைகள் கிடைக்குமா?

0
125
#image_title

அடேங்கப்பா.. முருங்கை கீரையில் சூப் செய்து பருகினால் உடலுக்கு இத்தனை நன்மைகள் கிடைக்குமா?

நம் உடலை ஆரோக்கியமாக வைப்பதில் முருங்கை கீரையை விட சிறந்த மருந்து வேறு எதுவும் இல்லை. இப்படிப்பட்ட முருங்கை கீரையில் அதிகளவு ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் இருப்பதினால் உடலில் உள்ள மெட்டபாலிசத்தை தூண்டி கலோரிகளை வேகமாக கரைத்து, உடல் பருமனை குறைக்கின்றது. இவ்வளவு நன்மைகள் உள்ள இந்த கீரையை உணவாக எடுத்து வந்தோம் என்றால் எளிதில் நோய் பாதிப்புக்கு ஆளாகாமல் இருப்போம்.

முருங்கை கீரை சூப் பருகுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்:-

1)உடல் பருமன்:

நம்மில் பலர் எண்ணெயில் பொரித்த உணவு, ஜங்க் புட் உள்ளிட்டவற்றை உண்டு வருவதால் உடல் எடை விரைவில் அதிகரித்து விடுகிறது. இதனை குறைக்க முடியாமல் பலரும் திணறி வருகின்றனர். இதற்கு முருங்கை கீரை சூப் சிறந்த தீர்வாக இருக்கும்.

2)நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க:

நம் உடல் ஆரோக்கியத்திற்கு நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் முக்கியமான ஒன்று. இவை குறைந்து விட்டால் பல வித நோய் பாதிப்புகள் நம்மை எளிதில் தாக்கி விடும். இந்த நோய் பாதிப்புகள் நம்மை அண்டாமல் இருக்கவும், உடல் ஆரோக்கியமாக இருக்கவும் நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் முக்கியம். நம் தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குவதில் முருங்கை கீரைக்கு முக்கிய பங்கு இருக்கிறது.

3)நீரிழிவு நோய் குணமாகும்:

முருங்கை கீரையில் அதிகளவு இரும்புச்சத்து அதிகளவில் இருக்கிறது. இவை இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க செய்கிறது. அதுமட்டும் இன்றி இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்துக் கொள்ள பெரிதும் உதவுகிறது.

4)மலச்சிக்கல்:

மலத்தை முறையாக கழிக்காமல் இருப்பதால் அவை நாளடைவில் மலச்சிக்கல் பாதிப்பாக மாறி விடுகிறது. இந்த பாதிப்பை சரி செய்ய முருங்கை கீரையில் செய்யப்பட்ட சூப்சிறந்த தீர்வாக இருக்கிறது.

5)எலும்பு வலுப்பெற:

அடிக்கடி முருங்கை கீரை சூப் பருகி வந்தோம் என்றால் உடலில் உள்ள எலும்புகள் வலுப்பெறும்.
மூட்டுவலி, எலும்பு தேய்மானம் உள்ளிட்ட பிரச்சனைகள் வரமால் இருக்கும்.

6)முடி வளர்ச்சி:

நம்மில் பலர் முடி உதிர்தல் பாதிப்பால் அவதிப்பட்டு வருகிறோம். இதை சரி முருங்கை கீரை சூப் செய்வது பருகுவது சிறந்த தீர்வாக இருக்கும்.

முருங்கை கீரை சூப் தயாரிக்கும் முறை:-

தேவையான பொருட்கள்:-

*முருங்கை கீரை – 2 கைப்பிடி அளவு

*கொத்தமல்லி – 1 தேக்கரண்டி

*பூண்டு – 6 பற்கள்

*சி.வெங்காயம் – 6 பற்கள்

*சீரகம் – 1/2 தேக்கரண்டி

*உப்பு – தேவையான அளவு

செய்முறை:-

முதலில் ஒரு கடாய் எடுத்து அதில் 1/2 லிட்டர் அளவு தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைக்க வேண்டும். பிறகு மேலே குறிப்பிட்டுள்ள பொருட்களில் உப்பை தவிர்த்து மற்ற அனைத்தையும் போட்டு நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.

பிறகு அடுப்பை அனைத்து விட்டு அவற்றை ஒரு பாத்திரத்தில் வடிகட்ட வேண்டும். இந்நிலையில் வடி கட்டியில் படிந்திருக்கும் பொருட்களை மிக்ஸி ஜாரில் அடித்து பிறகு மீண்டும் அந்த பானத்தில் கலக்கி தேவைக்கேற்ப உப்பு சேர்த்தால் சுவையான முருங்கை கீரை சூப் தயார்.

Previous articleநம் பணத்தை மிச்சப்படுத்தி சேமிக்க சிக்கன குறிப்புகள்!!
Next articleமுகப்பருக்களை குறைக்கும் சோம்பு பால்! இதை எப்படி தயார் செய்வது!!