திமுகவினர் தாக்கியதில் அதிமுக நிர்வாகி மரணம் : எடப்பாடி பழனிசாமி கண்டனம்!!

0
237
#image_title

திமுகவினர் தாக்கியதில் அதிமுக நிர்வாகி மரணம் : எடப்பாடி பழனிசாமி கண்டனம்!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் திமுக-வினர் தாக்குதல் நடத்தியதில் அதிமுக நிர்வாகிகள் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதிமுக நிர்வாகியின் மரணத்திற்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் காவல்துறையை உடனே நடவடிக்கை எடுத்து அவர்களை கைது செய்ய வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

செங்கல்பட்டு மேற்கு மாவட்டம், மறைமலைநகர் நகர மன்ற 2வது வார்டு உறுப்பினர் பதவிக்கு 2022ம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் அதிமுக வேட்பாளர் வெற்றிபெற்றார். இந்த வெற்றிக்கு, நகர 2வது வார்டு அதிமுக துணைச் செயலாளர் C. ஹேமநாதன் மற்றும் அவருடைய சகோதரர் C. கார்த்திகேயன் உள்ளிட்டோர் கடும் கட்சி பணி ஆற்றியதாக கூறப்படுகிறது. இத்தேர்தலில் தோல்வியடைந்த திமுக-வினர், கார்த்திகேயன் மீது கடந்த ஆண்டு கொலைவெறித் தாக்குதல் நடத்தினர். இதில், படுகாயம் அடைந்த அவர், 3 மாதங்கள் மருத்துவ சிகிச்சை பெற்று பின்னர் வீடு திரும்பியதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில், மறைமலைநகர் நகரில் கடந்த 18ஆம் தேதி அன்று உள்ளூர் கோயில் திருவிழா நடைபெற்றது. இப்போது, தனது வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்த கார்த்திகேயன் மீது மீண்டும் தாக்குதல் நடத்தும் நோக்கத்தில் திமுக-வினர் பாட்டாசுகளை வீசி வெடிக்கச் செய்துள்ளனர் இதைத் தட்டிக் கேட்ட, கார்த்திகேயன் அவர்களை திமுக-வினர் சரமாரியாகத் தாக்கியுள்ளனர். இதில், பலத்த காயங்களுடன் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து அறிந்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்கள், திமுகவினர் கொடூர தாக்குதலால் பலியான அதிமுக நிர்வாகியின் குடும்பத்தினருககு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் தெரிவித்துள்ளார். மேலும், கார்த்திகேயன் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தியவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் அனைவரையும் காவல் துறை உடனடியாகக் கைதுசெய்து சட்டத்தின் முன்பு நிறுத்தி, தக்க தண்டனை பெற்றுத் தர வேண்டும் என்று வலியுறுத்துவதாக எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

திமுக ஆட்சியில், திமுகவினரே தொடர்ந்து அராஜகத்தில் ஈடுபட்டு வருகின்றனர். எதிர்க்கட்சியான அதிமுகவினர் மீது தாக்குதல் சம்பவத்தை அரங்கேற்றுவது தொடர்ந்து கொண்டே வருவது குறிப்பிடத்தக்கது.

Previous articleஆசிய விளையாட்டு தொடக்க விழா – சீன அதிபர் ஜி ஜின்பிங் பங்கேற்பு!!
Next articleவாழ்க்கை அனுபவங்களை நாவலாக வெளியிட்ட பிரபல எழுத்தாளர்!!