அரசியலில் எதிரிகள் தொல்லை அழிய சிறப்பு வழிப்பாடு செய்த அதிமுக பொதுச் செயலாளர்!!
2024 ஆம் ஆண்டு மே மாதத்தில் லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. அதிமுக கட்சி பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி வைத்து சென்ற லோக்சபா தேர்தல் மற்றும் சட்டசபை தேர்தலில் தோல்வியை தழுவியது.
இதனால் ஒரு வலிமையான கூட்டணியை அமைக்க எடப்பாடி பழனிசாமி நினைக்கிறார். சில நாட்களுக்கு முன்பு சென்னையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது.
இதில் பேசிய எடப்பாடி பழனிசாமி, லோக்சபா தேர்தலில் யாருடன் கூட்டணி அமைக்க போகிறோம் என்பதை பற்றி கூற இன்னும் சில நாட்கள் இருக்கிறது என்று கூறினார்.
இந்த நிலையில் தற்போது அதிமுக தலைவரான எடப்பாடி பழனிசாமி திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு வந்துள்ளார். இன்று முதல் முறையாக தூத்துக்குடி மாவட்டத்திற்கு அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி வருகை தந்திருக்கிறார்.
இவர் இன்று காலை 7.30 மணிக்கு தூத்துக்குடி விமான நிலையத்திற்கு வந்து இறங்கினார். பிறகு இவருக்கு அனைவரும் ராஜ மரியாதை கொடுத்து திருச்செந்தூர் கோவிலுக்கு அழைத்து சென்றனர்.
எனவே திருச்செந்தூர் வந்த எடப்பாடி பழனிசாமி சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு வழிபாடு செய்ய சென்றார். இவருக்கு கோவிலில் பூரண கும்ப மரியாதை செலுத்தப்பட்டது.
இவர் சாமி தரிசனத்தை முடித்து விட்டு, பிறகு சுவாமி மூலவர், சண்முகர், சத்ரு சம்கார மூர்த்தி மற்றும் பல்வேறு தெய்வங்களை வணங்கிவிட்டு திருச்செந்தூரில் இருந்து விடைபெற்றுக் கொண்டார்.
முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்று தான் இந்த திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில். மேலும், இன்று முருகனுக்கு ஏற்ற சஷ்டி திதி நாள்.
இந்த நாளில் சத்ரு சம்ஹார மூர்த்தியை வழிபாட்டு வந்தால் எதிரிகள் தொல்லை ஒழியும் என்று கூறுவார்கள். எனவே அரசியலில் எதிரிகள் தொல்லை அழிய திருசெந்தூரில் எடப்பாடி பழனிசாமி சிறப்பு வழிபாட்டை நடத்தி உள்ளார்.