கூட்டணி கதவு இந்த கட்சிக்கு திறந்தே இருக்கும் – மாஜி அமைச்சர் அதிரடி..!!

0
413
#image_title

கூட்டணி கதவு இந்த கட்சிக்கு திறந்தே இருக்கும் – மாஜி அமைச்சர் அதிரடி..!!

நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில் தமிழக அரசியலில் பல்வேறு அதிரடி மாற்றங்கள் நடந்து வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன் பாஜக உடனான கூட்டணியை முறித்து கொண்ட அதிமுக, நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற தொடர்ந்து பல வியூகங்களை வகுத்து வருகிறது.

சிறுபான்மை ஓட்டுக்களை ஈர்க்கும் முயற்சியில் இறங்கி இருக்கும் அதிமுக, பல்வேறு அதிரடி செயல்களை நிகழ்த்தி வருகிறது. அதிமுகவின் இந்த தீவிரம் திமுகவிற்கு நிச்சயம் சருக்களை ஏற்படுத்தும் என்பது அரசியல் புள்ளிகளின் கருத்தாக உள்ளது.

அதிமுக மேலிடமானது பாமக, தேமுதிக, விசிக உடன் தொடர்ந்து கூட்டணி பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருவதாக செய்திகள் வெளிவந்த வண்ணம் இருந்தாலும் இதுகுறித்து எந்த ஒரு அதிகார்ப்பூர்வ அறிவிப்பையும் அக்கட்சி தரப்பில் வெளிப்படையாக சொல்லப்படவில்லை. இந்நிலையில் கூட்டணி கதவு காங்கிரஸ் கட்சிக்காக எப்பொழுது திறந்தே இருக்கும் என்று அதிமுகவின் முக்கிய நிர்வாகியும், முன்னாள் அமைச்சருமான ஜெயக்குமார் அவர்கள் அதிரடியாக தெரிவித்து இருக்கிறார்.

சென்னை பாரிஸ் கார்னரில் செய்தியாளர்களை சந்தித்த அவர் ஜெயக்குமார் அவர்கள் பல்வேறு அதிரடி கருத்துக்களை தெரிவித்தார்.

தங்கள் கட்சியுடன் கூட்டணி வைக்க நாங்கள் யாரையும் அழைக்க வேண்டியது இல்லை. ஆனால் பாஜக உடனான கூட்டணி கதவு மட்டும் மூடப்பட்டு இருக்கிறது. பாஜக உடனான கூட்டணி முறிவு இறுதியானது தான். அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால் காங்கிரஸ் உள்ளிட்ட மற்ற கட்சிகளுக்கு கூட்டணி கதவு எப்பொழுதும் திறந்தே இருக்கும் என்று அதிரடியாக தெரிவித்தார்.

தாங்கள் காங்கிரஸ் உடன் கூட்டணி குறித்து பேச வேண்டிய அவசியம் இல்லை. ஏற்கனவே திமுகவிற்கும் காங்கிரஸுக்கும் இடையே கருத்து முரண்பாடு நிலவி வருகிறது. இதனால் திமுக உடனான கூட்டணி தானாகவே முறிந்து விடும். காங்கிரஸ் மட்டும் இன்றி இதர கூட்டணி கட்சிகளுக்கும் திமுகவின் செயல்பாடு பிடிக்காத காரணத்தினால் அவர்களும் விரைவில் திமுக உடனான கூட்டணியில் இருந்து விலகி அவர்களாகவே அதிமுக கூட்டணியில் இணைந்து விடுவார்கள் என்று செய்தியாளர்கள் சந்திப்பின் போது அவர் தெரிவித்தார்.

Previous articleSBI- இல் வேலை! Interview மட்டுமே!
Next articleகொரோனாவின் ஆட்டம் மீண்டும் ஆரம்பம்..!! உயிரிழப்பு எண்ணிக்கை உயர்வு..! பீதியில் மக்கள்..!!