கொரோனாவின் ஆட்டம் மீண்டும் ஆரம்பம்..!! உயிரிழப்பு எண்ணிக்கை உயர்வு..! பீதியில் மக்கள்..!!

0
208
#image_title

கொரோனாவின் ஆட்டம் மீண்டும் ஆரம்பம்..!! உயிரிழப்பு எண்ணிக்கை உயர்வு..! பீதியில் மக்கள்..!!

கடந்த 2019 ஆம் ஆண்டின் இறுதியில் சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி சுமார் 70 லட்சம் உயிர்களை காவு வாங்கியது. இந்த வைரஸ் இந்தியாவில் ஒரு கோர தாண்டவத்தை காட்டிய நிலையில் பல்வேறு தீவிர நடவடிக்கைகளுக்கு பின்னர் கட்டுக்குள் வந்தது.

கடந்த ஓர் ஆண்டாக கொரோனா தாக்கம் பெரிதாக காணப்படாத நிலையில் தற்பொழுது மீண்டும் அதன் ஆட்டத்தை தொடங்கி இருக்கிறது. இந்தியா மட்டும் இன்றி பல நாடுகளில் கொரோனா பரவல் வேகமெடுக்க தொடங்கி இருக்கிறது.

இந்தியாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா தாக்கம் அதிகரித்து இருக்கும் நிலையில் தென் மாநிலங்களில் ஒன்றான கேரளாவில் மூதாட்டி ஒருவருக்கு ஜே.என்.1 வகை கொரோனா தொற்று உறுதியாகி இருக்கிறது. இதனால் கேரளாவில் பல்வேறு கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டு இருக்கிறது. மீண்டும் மாஸ்க் அணியுமாறும், சமூக இடைவெளியை பின்பற்றுமாறும் பொதுமக்களுக்கு கேரளா அரசு அறிவுறித்தி வருகிறது.

தற்பொழுது வேகமாக எடுத்து வரும் கொரோனாவால் நேற்று அதாவது ஞாயிற்றுக் கிழமை மட்டும் சுமார் 335 பெருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருக்கிறது. அதுமட்டும் இன்றி கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 5 பேர் இறந்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த ஐவரில் நால்வர் கேரளாவை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நமது அண்டை மாநிலமான கேரளாவில் கொரோனா பரவல் வேகமெடுத்து வருவதால் தமிழக அரசு உரிய முன்னெச்சரிக்கை மற்றும் போதிய கட்டுப்பாடுகளை விதித்து வைரஸ் பரவலை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.