அதிரடியான பேட்டிங் மற்றும் பவுலிங்!!! ஒருநாள் தொடரை எளிமையாக கைப்பற்றிய இந்தியா!!!

0
34
#image_title

அதிரடியான பேட்டிங் மற்றும் பவுலிங்!!! ஒருநாள் தொடரை எளிமையாக கைப்பற்றிய இந்தியா!!!

இந்திய அணியின் பேட்ஸ்மேன் மற்றும் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக விளையாடியதால் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை கைப்பற்றியுள்ளது.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் விளையாடும் இரண்டாவது ஒருநாள் போட்டி நேற்று(செப்டம்பர்24) இந்தூரில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதையடுத்து களமிறங்கிய இந்தியா சிறப்பாக பேட்டிங் செய்து 50 ஓவர்களில் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 399 ரன்கள் குவித்தது. இந்திய அணியில் அதிரடியாக விளையாடி ஸ்ரேயாஸ் ஐயர் சதம் அடித்து 105 ரன்களும் சுப்மான் கில் சதம் அடித்து 104 ரன்களும் சேர்த்தனர்.

அதிரடியாக விளையாடிய சூரியகுமார் யாதவ் அரைசதம் அடித்து 72 ரன்கள் சேர்த்தார். கே.எல் ராகுல் அரைசதம் அடித்து 52 ரன்களும் இஷான் கிஷன் 31 ரன்கள் சேர்த்தனர். ஆஸ்திரேலிய அணியில் பந்துவீச்சில் வீச்சில் கேமரூன் கிரீன் 2 விக்கெட்டை கைப்பற்றினார். ஹேசல்வுட், ஜாம்பா, சீன் அபாட் ஆகியோர் தலா 1 விக்கெட்டை கைப்பற்றினர்.

இதையடுத்து 400 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி ஆஸ்திரேலிய அணி களமிறங்கியது. ஆஸ்திரேலிய அணியின் ரசிகர்களுக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க வீரர் மேத்யூ ஷார்ட் 9 ரன்களுக்கும் அடுத்து களமிறங்கிய ஸ்டீவன் ஸ்மித் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தனர்.

அதன் பின்னர் களமிறங்கிய மார்னஸ் லபுச்சானே அவர்களும் மற்றொரு தொடக்க வீரர் டேவிட் வார்னர் அவர்களும் ரன் சேர்க்க தொடங்கினர். ஆட்டத்தின் 9வது ஓவரில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் சிறிது நேரம் தடைபட்டது. அதன் பின்னர் டக்வொர்த் லீவிஸ் முறைப்படி ஆஸ்திரேலிய அணிக்கு 317 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. மேலும் 50 ஓவர்கள் 33 ஓவர்களாக குறைக்கப்பட்டது.

அதிரடியாக விளையாட வேண்டும் என்ற கட்டாயத்தில் விளையாடத் தொடங்கிய ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் அஷ்வின் மற்றும் ஜடேஜா ஆகியோரின் பந்துவீச்சில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.

இதனால் ஆஸ்திரேலிய அணி 28.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 217 ரன்கள் எடுத்து இலக்கை எட்ட முடியாமல் தோல்வியை தழுவியது. 99 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தேடலை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

ஆஸ்திரேலிய அணியில் பேட்டிங்கில் அதிகபட்சமாக சீன் அபாட் அரைசதம் அடித்து 54 ரன்களும், டேவிட் வார்னர் அரைசதம் அடித்து 53 ரன்களும் சேர்த்தனர். இந்திய அணியில் பந்துவீச்சில் ரவி அஷ்வின், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், பிரசித் கிருஷ்ணா 2 விக்கெட்டையும் முகமது ஷமி ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். ஆட்டநாயகன் விருதை ஸ்ரேயாஸ் ஐயர் கைப்பற்றினார்.

இந்தியா மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்த இரண்டு அணிகளும் மோதும் கடைசி ஒருநாள் போட்டி செப்டம்பர் 27ம் தேதி நடைபெறவுள்ளது.