நீரிழவு நோயை கட்டுக்குள் வைக்க உதவும் அற்புத பானம்!!

0
49
#image_title

நீரிழவு நோயை கட்டுக்குள் வைக்க உதவும் அற்புத பானம்!!

நவீன உலகில் அனைவரையும் எளிதில் தாக்கும் நோய் பதிப்பாக நீரிழிவு நோய் உள்ளது. இந்த நீரிழிவு(சர்க்கரை) நோயை கட்டுக்குள் வைத்துக் கொள்வது மிகவும் முக்கியம் ஆகும்.

சர்க்கரை நோய் உருவாகக் காரணங்கள்:-

*பரம்பரை நோய்

*உடல் பருமன்

*மன அழுத்தம்

*அடிக்கடி கர்ப்பம் அடைதல்

*அதிகளவு இனிப்பு எடுத்துக் கொள்ளுதல்

*உயர் இரத்த அழுத்தம்

*இரத்த மிகை கொழுப்பு

*சினைப்பை நீர்க்கட்டி

*சோம்பலான வாழ்க்கை முறை

சர்க்கரை நோய் அறிகுறிகள்:-

*அடிக்கடி சிறுநீர் வெளியேறுதல்

*அதிகப்படியான உடல் சோர்வு

*தண்ணீர் தாகம் அதிகரித்தல்

*கண் பார்வை மங்குதல்

*அதிகப்படியான தலைவலி

சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்க உதவும் ஜூஸ் வகைகள்:-

1)வெள்ளரி ஜூஸ்

அடிக்கடி வெள்ளரி ஜூஸ் செய்து பருகுவதன் மூலம் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்துக் கொள்ள முடியும். வெள்ளரியில் அதிகளவு பொட்டாசியம், நார்ச்சத்து, கலோரிகள் நிறைந்து காணப்படுகின்றன.

வெள்ளரி ஜூஸ் செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்:-

*வெள்ளரி

*தண்ணீர்

செய்முறை…

முதலில் வெள்ளரிக்காயை சுத்தம் செய்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.பின்னர் இதை மிக்ஸி ஜாரில் போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மைய்ய அரைத்துக் கொள்ளவும். பின்னர் இதை ஒரு டம்ளருக்கு மாற்றி பருகினால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும்.

2)முட்டைக்கோஸ் ஜூஸ்

முட்டைகோஸில் அதிகளவு ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் ஆன்டி-ஹைப்பர் கிளைசீமிக் பண்புகள் நிறைந்து காணப்படுகிறது. இவை நீரிழிவு நோயை கட்டுக்குள் வைத்துக் கொள்ள பெரிதும் உதவுகிறது.

முட்டைகோஸில் வைட்டமின் ஏ, கே, சி அதிகளவு காணப்படுகிறது. இவை இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்துக் கொள்ள உதவுகிறது.

முட்டைக்கோஸ் ஜூஸ் செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்:-

*முட்டைகோஸ்

*தண்ணீர்

செய்முறை…

முதலில் முட்டைகோஸ் சிறிதளவு எடுத்து பொடியாக நறுக்கி கொள்ளவும். அடுத்து தண்ணீர் கொண்டு சுத்தம் செய்து மிக்ஸி ஜாரில் சேர்த்து கொள்ளவும். பிறகு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மைய்ய அரைத்துக் கொள்ளவும். பின்னர் இதை ஒரு டம்ளருக்கு மாற்றி பருகினால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும்.