மருக்கள் உதிர அல்சர் குணமாக ‘அம்மான் பச்சரிசி’ போதும்!

Photo of author

By Divya

மருக்கள் உதிர அல்சர் குணமாக ‘அம்மான் பச்சரிசி’ போதும்!

தெருவோரங்களில் வளரக் கூடிய மூலிகை செடி அம்மான் பச்சரிசி. இந்த செடியின் விதை பார்ப்பதற்கு நெல் போல் தோற்றம் அளிப்பதினால் இதற்கு அம்மான் பச்சரிசி என்று பெயர் வந்தது. இந்த அம்மான் பச்சரிசி நீர்க்கட்டி, அல்சர், வாய்ப்புண், மருக்கள், சரும பிரச்சனை என்று அனைத்திற்கும் தீர்வாக இருக்கிறது.

அல்சர்

அம்மான் பச்சரிசி இலையை அரைத்து பாலில் கலந்து குடித்து வந்தால் அல்சர், வாய்ப்புண் முழுமையாக குணமாகும்.

மருக்கள்

உடலில் உள்ள மருக்களை அகற்ற அம்மன் பச்சரிசி இலையை அரைத்து விழுதாக்கி மருக்கள் மீது பூசினால் தீர்வு கிடைக்கும்.

நீர்க்கட்டி

அம்மான் பச்சரிசி இலையை உலர்த்தி பொடியாக்கி வெதுவெதுப்பான நீரில் கலந்து குடித்தால் நீர்க்கட்டி கரையும்.

சரும பிரச்சனை

முகத்தில் உள்ள கரும்புள்ளிகள், தேமல், படர் தாமரை, மங்கு மறைய அம்னான் பச்சரிசி மற்றும் வேப்பிலையை அரைத்து பூசலாம்.

நோய் எதிர்ப்பு சக்தி

உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்க அம்மான் பச்சரிசி இலையை அரைத்து டீ செய்து குடித்து வரலாம்.