வயிறு உப்பசம்? ஒரு துண்டு இஞ்சி இருந்தால் ஒரு நிமிடத்தில் தீர்வு கண்டு விடலாம்!!

Photo of author

By Divya

வயிறு உப்பசம்? ஒரு துண்டு இஞ்சி இருந்தால் ஒரு நிமிடத்தில் தீர்வு கண்டு விடலாம்!!

Divya

வயிறு உப்பசம்? ஒரு துண்டு இஞ்சி இருந்தால் ஒரு நிமிடத்தில் தீர்வு கண்டு விடலாம்!!

எந்த உணவு சாப்பிட்டாலும் வயிறு உப்பசமாக இருப்பது போன்ற உணர்வு உங்களில் சிலருக்கு ஏற்படும்.சிலருக்கு எதுவும் சாப்பிடாமலே வயிறு உப்பசம் ஏற்படும்.இந்த பாதிப்புக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இந்த கை வைத்தியம் நிச்சயம் கை கொடுக்கும்.

தேவையான பொருட்கள்:-

1)இஞ்சி துண்டு
2)மிளகு
3)ஓமம்
4)மஞ்சள் தூள்
5)சீரகம்

செய்முறை:-

உரலில் ஒரு துண்டு இஞ்சி போட்டு இடித்து வைத்துக் கொள்ளவும்.அதேபோல் 4 கரு மிளகு,1/4 தேக்கரண்டி ஓமம் மற்றும் 1/4 தேக்கரண்டி சீரகத்தை உரலில் போட்டு இடித்துக் கொள்ளவும்.

பிறகு அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.பின்னர் இடித்த இஞ்சி துண்டு சேர்த்து கொதிக்க விடவும்.

அதன் பின்னர் இடித்த மிளகு,ஓமம் மற்றும் சீரகத்தை போட்டு மிதமான தீயில் 30 நிமிடங்களுக்கு கொதிக்க விட்டு அடுப்பை அணைக்கவும்.

இதை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி சிட்டிகை அளவு மஞ்சள் கலந்து குடிக்கவும்.இவ்வாறு செய்தால் வயிறு உப்பசத்திற்கு உடனடி தீர்வு கிடைக்கும்.

இஞ்சி,சீரகம்,ஓமம் செரிமானப் பிரச்னைக்கு தீர்வாக இருக்கிறது.அதேபோல் மஞ்சள் தூள் உடலில் உள்ள கெட்ட கிருமிகளை அழிக்க உதவுகிறது.மிளகு உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குகிறது.