மலச்சிக்கல், வாயுத் தொல்லைக்கு தீர்வு அன்னப்பொடி – இதை தயார் செய்வது எப்படி?

Photo of author

By Divya

மலச்சிக்கல், வாயுத் தொல்லைக்கு தீர்வு அன்னப்பொடி – இதை தயார் செய்வது எப்படி?

நவீன கால உலகில் சத்தான உணவு அதிக விலை கொடுத்தாலும் கிடைக்காது.. அந்த அளவிற்கு உணவுமுறை பெரும் மாற்றத்தை கண்டு இருக்கின்றது.

இந்த உணவுமுறை மாற்றத்தால் உடல் ஆரோக்கியம் கெடுவது 100% உறுதி. ஆனால் இதை பற்றி யாரும் எண்ணாமல் வாய்க்கு ருசியாக இருந்தால் போதும் என்று நினைக்கின்றனர்.

இதனால் வயிறுத் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படுவது அதிகமாகிறது. மலச்சிக்கல் பாதிப்பு நீண்ட நாட்கள் தொடர்ந்தால் பைல்ஸ் உண்டாகும்.. செரிமானப் பிரச்சனை ஏற்பட்டால் குடலில் புண், வாயுத் தொல்லை ஏற்படும்.

ஆரோக்கியமற்ற உணவை சாப்பிட்டு கெட்டு போன உடம்பை வலிமையாக்க அன்னப்பொடி செய்து சாப்பிடவும்.

அன்னப்பொடி பயன்கள்…

1)மலச்சிக்கல் குணமாகும்
2)வாயுத் தொல்லை நீங்கும்
3)செரிமானக் கோளாறு நீங்கும்
4)வயிறு உப்பசம்
5)உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும்
6)வயிற்றுப் போக்கு குணமாகும்
7)காய்ச்சல், சளி, இருமல் குணமாகும்
8)குடல் சுத்தமாகும்
9)பல் வலி குணமாகும்
10)இரத்தம் சுத்தமாகும்

அன்னப்பொடி செய்யத் தேவைப்படும் பொருட்கள்…

*சுண்டைக்காய்
*திப்பிலி
*சுக்குத் தூள்
*மணத்தக்காளி காய்
*துவரை
*வேப்பம் பூ
*கொத்தமல்லி விதை
*மிளகு
*சீரகம்
*வெந்தயம்
*மிளகாய் வற்றல்
*பெருங்காயத் தூள்
*நெய்
*உப்பு

செய்முறை…

சுண்டைக்காய் மற்றும் மணத்தக்காளி காயை நன்கு காயவைத்துக் கொள்ளவும்.

பிறகு மேலே குறிப்பிட்டுள்ள பொருட்களையும் சம அளவு எடுத்து அரைத்து பொடி செய்து கொள்ளவும்.

இந்த பொடியை ஒரு டப்பாவில் போட்டு சேமிக்கவும். இதை இட்லி பொடி போல் சூடான சாதத்தில் போட்டு நெய் சேர்ந்து கலந்து சாப்பிடவும்.