புற்றுநோய் பாதிப்பை தடுக்கும் “சேனைக் கிழங்கு” வறுவல் – சுவையாக செய்வது எப்படி?

0
100
#image_title

புற்றுநோய் பாதிப்பை தடுக்கும் “சேனைக் கிழங்கு” வறுவல் – சுவையாக செய்வது எப்படி?

கிழங்கு வகை உணவுகள் உடலுக்கு பலவித நன்மைகளை வழங்குகிறது.அதில் ஒன்றான சேனைக் கிழங்கில் பொட்டாசியம்,கால்சியம்,விட்டமின் சி,பி6,ஒமேகா 3,நார்ச்சத்து,மாங்கனீஸ் உள்ளிட்ட சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.

இதை அடிக்கடி சாப்பிட்டு வந்தோம் என்றால் உடல் எடை குறையும்.அதேபோல் மூட்டுவலி, பெருங்குடல் அழற்சி,கல்லீரல் பாதிப்பு உள்ளிட்டவை சரியாகும்.

அதேபோல் மன அழுத்தம்,மலசிக்கல் உள்ளிட்ட பாதிப்புகளுக்கு சிறந்த தீர்வாக இந்த சேனைக் கிழங்கு இருக்கிறது.இரத்த அழுத்த பாதிப்பை விரைவில் குணப்படுத்தும் தன்மை இந்த சேனைக் கிழங்கிற்கு உண்டு.

அதுமட்டும் இன்றி சேனைக்கிழங்கில் அதிகளவு ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்து இருப்பதால் இவை உடலில் ஆக்சிஜனேற்ற அழுத்தத்தை தடுத்து புற்றுநோய் வராமல் பாதுகாக்கிறது.

தேவையான பொருட்கள்:-

*சேனைக் கிழங்கு துண்டுகள் – 10

*மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை

*காஷ்மீரி மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி

*மிளகாய் தூள் – 1/2 தேக்கரண்டி

*இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 தேக்கரண்டி

*கொத்தமல்லி தூள் – 1/2 தேக்கரண்டி

*சீரகத்தூள் – 1/4 தேக்கரண்டி

*பெருஞ்சீரகத் தூள் – 1/4 தேக்கரண்டி

*எலுமிச்சை சாறு – 1 தேக்கரண்டி

*எண்ணெய் – 3 தேக்கரண்டி

*உப்பு – தேவைக்கேற்ப

செய்முறை:-

முதலில் ஒரு சேனைக் கிழங்கு எடுத்து அதன் தோலை நீக்கி கொள்ளவும்.பின்னர் அதை தண்ணீர் கொண்டு சுத்தம் செய்து கொள்ளவும்.அடுத்து அதை 10 மெலிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் 2 கப் தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும்.தண்ணீர் நன்கு கொதிக்கும் தருணத்தில் சிறிதளவு உப்பு மற்றும் 1 சிட்டிகை அளவு மஞ்சள் தூள் சேர்த்து கொள்ளவும்.பிறகு நறுக்கி வைத்துள்ள சேனைக் கிழங்கு துண்டுகளை அதில் சேர்த்து பாதி வேக விடவும்.பின்னர் அடுப்பை அணைக்கவும்.

இந்த சேனைக்கிழங்கு துண்டுகளை எடுத்து ஒரு தட்டில் வைத்துக் கொள்ளவும்.

பின்னர் ஒரு அகலமான பாத்திரம் எடுத்து அதில் 1 தேக்கரண்டி காஷ்மீரி மிளகாய் தூள்,
1/2 தேக்கரண்டி சிவப்பு மிளகாய் தூள்,1 தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது,1/2 தேக்கரண்டி கொத்தமல்லி தூள்,1/4 தேக்கரண்டி சீரக தூள்,1/4 தேக்கரண்டி சோம்புத்தூள்,தேவையான அளவு உப்பு மற்றும் 1 தேக்கரண்டி எலுமிச்சை சாறு சேர்த்து கொள்ளவும்.பிறகு அதில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து பேஸ்ட் போல் மாற்றி கொள்ளவும்.

பின்னர் அந்த கலவையில் வேக வைத்துள்ள சேனைக் கிழங்கு துண்டுகளை சேர்த்து 1/2 மணி நேரம் வரை ஊற விடவும்.

பிறகு அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் 3 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி கொள்ளவும்.அவை சூடேறியதும் அதில் மசாலா கலவையில் ஊறவைத்துள்ள சேனைக் கிழங்கை சேர்த்து மிதமான தீயில் வதக்கவும்.அடுத்து அதில் கொத்தமல்லி இலை மற்றும் கருவேப்பிலை சிறிதளவு சேர்த்து கொள்ளவும்.பின்னர் அடுப்பை அணைக்கவும்.

Previous article“சோம்பு பால்” குடிப்பதினால் உடலுக்கு கிடைக்கும் எக்கச்சக்க நன்மைகள்!!
Next articleதீராத மூட்டுவலி பிரச்சனை இருக்கின்றதா!!? இதோ அதை குணப்படுத்த இந்த நான்கு பொருட்கள் போதும்!!!