முகத்தில் உள்ள கொப்பளங்கள் சில தினங்களில் மறைய இதை அங்கு தடவுங்கள்!

0
79
#image_title

முகத்தில் உள்ள கொப்பளங்கள் சில தினங்களில் மறைய இதை அங்கு தடவுங்கள்!

இளம் பருவத்தில் ஆண், பெண் சந்திக்கும் மிகப் பெரிய பாதிப்பு முகப்பரு. இவை முக அழகை கெடுக்கும் விதமாக இருக்கும். இந்த முகப்பருவை மறைய வைக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை தொடர்ந்து பின்பற்றி வரவும்.

தீர்வு 01:-

*தேன்
*பட்டை தூள்
*வேப்பம்பூ பொடி

ஒரு கிண்ணத்தில் சுத்தமான தேன், 1 ஸ்பூன் பட்டை தூள், 1 ஸ்பூன் வேப்பம் பூ பொடி சேர்த்து கலக்கி முகப்பருக்கள் மீது தடவி 20 நிமிடங்களுக்கு பின்னர் முகத்தை கழுவி வந்தால் பருக்கள் மறையும்.

தீர்வு 02:-

*வேப்பிலை
*மஞ்சள்

தேவையான அளவு வேப்பிலை எடுத்து காயவைத்து பொடி செய்து கொள்ளவும்.

இந்த பொடியில் 1 ஸ்பூன் கஸ்தூரி மஞ்சள் தூள் மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து குழைத்து முகப்பருக்கள் மீது தடவி 20 நிமிடங்களுக்கு பின்னர் முகத்தை கழுவி வந்தால் பருக்கள் மறையும்.

தீர்வு 03:-

*கற்றாழை ஜெல்
*ஐஸ்கட்டி

முகத்தை சுத்தமான நீரில் கழுவி விட்டு பிறகு ஐஸ்கட்டி கட்டியை முகப்பருக்கள் மீது தடவி விடவும்.

பிறகு கற்றாழை மடலில் இருந்து பிரஸ் கற்றாழை ஜெல் எடுத்து முகத்தில் தடவி மஜாஜ் செய்யவும். இவ்வாறு செய்து வந்தால் முகப்பருக்கள் சில தினங்களில் மறையும்.