இந்த கிழங்கின் தோலை இவ்வாறு பயன்படுத்தினால் கண் கட்டிக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும்!

Photo of author

By Divya

இந்த கிழங்கின் தோலை இவ்வாறு பயன்படுத்தினால் கண் கட்டிக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும்!

கண் இமைகளின் மேல் மற்றும் கீழ் பகுதிகளில் கட்டி போன்று உருவாவதை தான் கட்டி என்று அழைக்கின்றோம். இந்த கண் கட்டி உடலில் அதிகப்படியான சூடு இருந்தால் ஏற்படும்.

அதுமட்டும் இன்றி உடலில் நீர்சத்து குறைதல், ஊட்டச்சத்து குறைதல் போன்ற பல காரணங்களால் கண்கட்டி ஏற்படுகிறது.

இந்த கண் கட்டி குணமாக கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியம் தங்களுக்கு உதவும்.

1)உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கின் மேல் தோலை மட்டும் எடுத்து கண் கட்டி உள்ள இடத்தில் ஒத்தடம் போல் கொடுத்து வந்தால் அவை ,முழுமையாக குணமாகும்.

2)கொத்தமல்லி விதை

ஒரு கிளாஸ் அளவு நீரில் 1/4 தேக்கரண்டி கொத்தமல்லி விதை சேர்த்து காய்ச்சி வெதுவெதுப்பான சூட்டில் கண்களை கழுவி வந்தால் ஓரிரு நாட்களில் கண்கட்டி குணமாகும்.

3)தேங்காய் பால்

காலையில் எழுந்ததும் ஒரு கிளாஸ் தேங்காய் பால் குடித்து வந்தால் கண்ணில் ஏற்பட்டுள்ள கட்டி முழுமையாக குணமாகும். கண் கட்டி ஏற்படுவது தடுக்கப்படும்.

4)வெந்தயம்

ஒரு தேக்கரண்டி வெந்தயத்தை தண்ணீர் ஊறவைத்து அரைத்து கண் கட்டி உள்ள இடத்தில் பூசினால் நல்ல தீர்வு கிடைக்கும்.

5)கற்றாழை ஜெல்

கற்றாழை மடலில் இருக்கும் ஜெல்லை எடுத்து கண் இமையில் ஏற்பட்டிருக்கும் கட்டியில் வைத்து வந்தால் அவை முழுமையாக குணமாகும்.