இதை மூட்டுகளின் மேல் தடவினால் எப்பேர்ப்பட்ட மூட்டு வலியும் தெறித்தோடி விடும்!!

0
136
#image_title

இதை மூட்டுகளின் மேல் தடவினால் எப்பேர்ப்பட்ட மூட்டு வலியும் தெறித்தோடி விடும்!!

முந்தைய காலத்தில் பெரியவர்கள் மட்டும் தான் மூட்டு வலி பிரச்சனையை சந்தித்து வந்தனர். ஆனால் தற்பொழுது இளம் வயதினருக்கும் மூட்டு வலி ஏற்படுவது அதிகரித்து வருகின்றது. நாளடைவில் மூட்டு வலியுடன் சேர்த்து எலும்பு தேய்மானமும் ஏற்பட ஆரம்பித்து விடுகிறது.

மூட்டுவலி வரக் காரணங்கள்:-

உடல் பருமன், முதுமை, எலும்புகளில் அடிபடுதல், ஆரோக்கியமற்ற உணவு முறை பழக்கம்.

தேவையான பொருட்கள்:-

*வெள்ளை கடுகு

*மிளகு

*சுக்கு துண்டு

*மஞ்சள் தூண்டு

*சாம்பிராணி

செய்முறை…

ஒரு உரலில் 1 தேக்கரண்டி மிளகு சேர்த்து இடித்து ஒரு தட்டிற்கு மாற்றிக் கொள்ளவும். அடுத்து 1 துண்டு சுக்கை உரலில் போட்டு இடித்துக் எடுத்துக் கொள்ளவும். பின்னர் 1 துண்டு காய்ந்த மஞ்சள் துண்டு சேர்த்து இடித்து எடுத்துக் கொள்ளவும்.

பிறகு 1 கட்டி சாம்பிராணி போட்டு இடித்து தூள் செய்து கொள்ளவும். அடுத்து 1 தேக்கரண்டி வெள்ளை கடுகு சேர்த்து இடித்துக் கொள்ளவும்.

பின்னர் இடித்த அனைத்து பொருட்களையும் ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு நன்கு பொடி செய்து கொள்ளவும். பின்னர் தண்ணீர் ஊற்றி மைய்ய அரைத்துக் கொள்ளவும்.

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி சூடுபடுத்தவும். பின்னர் அரைத்து வைத்துள்ள விழுதை அதில் சேர்த்து மிதமான தீயில் நன்கு கொதிக்க விடவும். கலவை நன்கு கொதித்து வந்த பின்னர் அடுப்பை அணைத்து விடவும்.

தயார் செய்து வைத்துள்ள இந்த பேஸ்ட் வெது வெதுப்பான சூட்டில் இருக்கும் மூட்டுகளின் மேல் தடவி 1 மணி நேரம் வரை விட்டு பின்னர் கழுவிக் கொள்ளவும். இவ்வாறு தொடர்ந்து செய்து வருவதன் மூலம் நாள்பட்ட மூட்டு வலி விரைவில் குணமாகும்.

மற்றொரு தீர்வு:-

தேவையான பொருட்கள்:-

*கிராம்பு

*மஞ்சள் தூள்

*இஞ்சி

*எலுமிச்சை சாறு

செய்முறை:

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் 1 கிளாஸ் தண்ணீர் ஊற்றிக் கொள்ள வேண்டும். பின்னர் அதில் 3 கிராம்பு, 1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள், 1 துண்டு இடித்த இஞ்சி சேர்த்து மிதமான தீயில் சில நிமிடங்கள் கொதிக்க விட்டு அடுப்பை அணைக்கவும்.

பிறகு இவற்றை ஒரு டம்ளருக்கு வடிகட்டி எலுமிச்சை சாறு கலந்து பருகவும். இவ்வாறு தொடர்ந்து எடுத்து வருவதால் மூட்டுகளின் இணைப்பில் ஏற்படும் வலிகள் நாளடைவில் குறையும்.

கிராம்பில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட், அதிகளவு குர்குமின் கொண்ட மஞ்சள், ஆன்டி பயோடிக் பண்புகள் கொண்ட இஞ்சி ஆகியவற்றை சேர்த்து கஷாயம் செய்து குடிப்பதன் மூலம் மூட்டுகளின் இணைப்பில் ஏற்படும் வலிகளை குறைக்க முடியும்.