கரப்பான் பூச்சி உங்களை பாடாய் படுத்துகிறதா? கவலையை விடுங்க.. உடனடி தீர்வு கிடைக்க இதை ட்ரை பண்ணுங்க!!

0
47
#image_title

கரப்பான் பூச்சி உங்களை பாடாய் படுத்துகிறதா? கவலையை விடுங்க.. உடனடி தீர்வு கிடைக்க இதை ட்ரை பண்ணுங்க!!

நம்மில் பெரும்பாலானோர் வீடுகளின் சமையலறைகளில் கரப்பான் பூச்சி நடமாட்டம் அதிகம் இருக்கும்.இது நம் உடலுக்கு பல்வேறு நோய்ப் பதிப்புகளை ஏற்படுத்தும் அபாயத்தை கொண்டது.இந்த கரப்பான் பூச்சி பிரச்சனையை ஆரம்ப நிலையிலேயே சரி செய்வது மிகவும் அவசியம் .

தேவையான பொருட்கள்:-

*எலுமிச்சை சாறு – 1

*ஷாம்பு – 1 தேக்கரண்டி

*சர்க்கரை – 1 தேக்கரண்டி
(அல்லது)
தேன்

செய்முறை:-

1.முதலில் ஒரு பவுல் எடுத்து அதில் 1 முழு எலுமிச்சை பழ சாற்றை பிழிந்து கொள்ள வேண்டும்.

2.பிறகு அதில் 1 தேக்கரண்டி அளவு தண்ணீர் ஊற்றி கலந்து கொள்ளவும்.

3.நம் தலைக்கு பயனப்டுத்தும் ஷாம்புகளில் ஏதேனும் ஒரு வகையில் இருந்து 1 தேக்கரண்டி அளவு எடுத்து அந்த பவுலில் சேர்க்கவும்.

4.அதன் பிறகு ஒரு ஸ்பூன் சர்க்கரை எடுத்து அதில் சேர்த்து மெதுவாக கலக்கி கொள்ளவும்.

5.கலக்கி வைத்துள்ள கலவையை ஒரு ஸ்பிரேயர் பாட்டிலில் சேர்த்து வீட்டில் கரப்பான் பூச்சி தொல்லை இருக்கும் இடங்களில் தெளித்தால் அவை மீண்டும் வீட்டு பக்கமே வராது.

மற்றொரு முறை:-

தேவையான பொருட்கள்:-

*பூண்டு – 6 பற்கள்

*பெரிய வெங்காயம் – பாதி அளவு

*எலுமிச்சை பழச்சாறு – 2 தேக்கரண்டி

*டெட்டால் – 2 தேக்கரண்டி

செய்முறை:-

முதலில் ஓரு பவுல் எடுத்து கொள்ளவும்.அதில் 1/2 டம்ளர் தண்ணீர் ஊற்றி கொள்ளவும்.பின்னர் டெட்டால் 2 தேக்கரண்டி அளவு எடுத்து அதில் சேர்க்கவும்.

பின்னர் ஒரு மிக்ஸி ஜாரில் பெரிய வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து அரைத்து சாறு பிழிந்து எடுத்து கொள்ளவும்.

அந்த சாற்றை டெட்டால் கலந்து வைத்துள்ள தண்ணீரில் சேர்க்கவும்.பின்னர் அதில் எலுமிச்சை பழச்சாறு 2 தேக்கரண்டி சேர்த்து நன்கு கலக்கவும்.இந்த கலவையை ஒரு ஸ்பிரே பாட்டிலில் ஊற்றி வீட்டில் கரப்பான் பூச்சிகள் நடமாட்டம் இருக்கும் பகுதிகளில் தெளிக்கவும்.இப்படி செய்தால் வீட்டில் இனி கரப்பான் பூச்சி தொல்லை இருக்காது.