எலுமிச்சை ஊறுகாய் என்றால் மிகவும் பிடிக்குமா? அப்போ இப்படி செய்து பாருங்கள் ருசியாக இருக்கும்!!

0
34
#image_title

எலுமிச்சை ஊறுகாய் என்றால் மிகவும் பிடிக்குமா? அப்போ இப்படி செய்து பாருங்கள் ருசியாக இருக்கும்!!

அனைவருக்கும் பிடித்த சைடிஷ் ஊறுகாய்.இதில் இஞ்சி ஊறுகாய், மாங்கா ஊறுகாய், நார்த்தங்காய் ஊறுகாய்,தக்காளி ஊறுகாய் என்று பல வகைகள் உள்ளன.அதிலும் பெரும்பாலானோர் விரும்பி சாப்பிடும் ஊறுகாயில் ஒன்று எலுமிச்சை ஊறுகாய் .இந்த எலுமிச்சை ஊறுகாய் ஊறுகாயை வீட்டு முறையில் சுவையாக செய்யும் முறை கொடுக்கப்பட்டு இருக்கிறது.

தேவையான பொருட்கள்:-

*எலுமிச்சம் பழம் – 8 முதல் 10

*நல்லெண்ணெய் – 4 தேக்கரண்டி

*மிளகாய் தூள் – 2 1/2 தேக்கரண்டி

*வெந்தயத்தூள் – 1/4 தேக்கரண்டி

*பெருங்காயத்தூள் – 1/2 தேக்கரண்டி

*உப்பு – தேவையான அளவு

செய்முறை:-

ஒரு பாத்திரம் எடுத்து தண்ணீர் ஊற்றி அதில் 8 முதல் 10 எலுமிச்சம் பழத்தை போட்டு நன்கு சுத்தம் செய்து கொள்ளவும்.பின்னர் அதை ஒரு தட்டிற்கு மாற்றி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.எலுமிச்சம் பழ விதைகளை நீங்கி விடவும்.ஊறுகாயில் சேர்ந்து விட்டால் கசப்பு தன்மை ஏற்பட்டு விடும்.

பின்னர் இதை ஒரு இரும்பு கடாயில் அல்லது கண்ணாடி பாட்டிலில் போடவும்.அதில் சிறிதளவு கல் உப்பு சேர்த்து 3 நாட்கள் வரை ஊற வைக்கவும்.இந்த 3 நாட்களில் காலை,மாலை வேளைகளில் ஊறவைத்துள்ள எலுமிச்சை பழத்தை 3 முதல் 4 முறை நன்கு குலுக்கி விடவும்.

அதன் பின்னர் 3வது நாள் மாலையில் ஊறவைத்த எலுமிச்சை பழத்தை ஒரு தட்டிற்கு மாற்றி கொள்ளவும்.இந்த எலுமிச்சை உப்பில் ஊறி மிகவும் மிருதுவாக இருக்கும்.

பிறகு அடுப்பில் கடாய் வைத்து அதில் 4 முதல் 5 தேக்கரண்டி நல்லெண்ணையை ஊற்றவும்.பின்னர் அவை சூடேறியதும் அதில் 2 1/2 தேக்கரண்டி தனி மிளகாய் தூள்,1/4 தேக்கரண்டி வெந்தயத்தூள் மற்றும் 1/2 தேக்கரண்டி பெருங்காயத்தூள் சேர்த்து ஊற வைத்த எலுமிச்சம் பழ துண்டுகளை சேர்த்து 2 முதல் 3 நிமிடம் நன்கு கிளறி விடவும்.

பின்னர் அடுப்பை அணைத்து ஆறவிடவும்.வெந்தயம் சிறிதளவு எடுத்து கடாயில் போட்டு வறுத்து பொடி செய்து அதில் சேர்க்கவும்.இப்பொழுது ஆறவைத்துள்ள எலுமிச்சை ஊறுகாயை ஒரு கண்ணாடி பாட்டிலில் போட்டு சேமித்து வைத்து கொள்ளவும்.எலுமிச்சை ஊறுகாய் இப்படி செய்தால் மிகவும் சுவையாக இருக்கும்.