ஜல்லிக்கட்டில் நாட்டு மாடுகள் மட்டும் அனுமதியா? சுப்ரீம் கோட்டிற்கு மேல்முறையீடு!

Photo of author

By Parthipan K

ஜல்லிக்கட்டில் நாட்டு மாடுகள் மட்டும் அனுமதியா? சுப்ரீம் கோட்டிற்கு மேல்முறையீடு!

2017 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழ்நாட்டிலும் மற்றும்  தமிழ்நாட்டில் வெளியையும் போராட்டங்கள் நடைபெற்றது. அதற்கு தை புரட்சி மெரினா புரட்சி இளைஞர்கள் புரட்சி என பெயர் வைக்கப்பட்டது.

மேலும் அரசியல் கட்சி தலைமைகளின் முனைப்புகள் இன்றி தலைமை அடையாளங்கள் இல்லாமல். தன்னிச்சையாகவே பொதுமக்கள் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் சமூக வலைதளங்களின் வழியாகவும் மற்றும் இளைஞர்களை திரட்டியும் போராட்டங்களை நடத்தி வந்தனர்.

மேலும் ஜனவரி மாதம் இறுதியில் இந்தப் போராட்டமானது முடிவுக்கு வந்தது. அதனைத் தொடர்ந்து தற்போது நான்கு ஆண்டு காலமாக தைத்திருநாள் அன்று வாடிவாசல்கள் திறக்கப்பட்டு மக்கள் அனைவரும் தை பொங்கலை கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் தற்போது தென்னை ஒன்றியம் துரைப்பாக்கத்தைச் சேர்ந்த ஜேசன் என்பவர் ஐகோர்ட்டில் மனு ஒன்று தாக்கல் செய்தார்.

இனி ஜல்லிக்கட்டு போட்டிகளில் நாட்டு இன மாடுகளை மட்டுமே அனுமதிக்க வேண்டும் எனவும் கலப்பின வெளிநாடு மாடுகள் பங்கேற்க தடை விதிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருந்தார். மனுவை விசாரித்த சென்னை ஐகோர்ட் ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலந்து கொள்ள நாட்டு மாடுகள் மட்டுமே அனுமதிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டது.

இந்த உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு சார்பில் வக்கீல் டி குமரன் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார் நீதிபதிகள் இந்திரா பானர்ஜி வி ராமசுப்பிரமணியம் ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று விசாரணையை தொடங்கியது. அரசின் மேல்முறையீட்டு மனுவை பரிசளித்த சுப்ரீம் கோர்ட் ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலந்து கொள்ள நாட்டு மாடுகள் மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்ற உத்தரவை சென்னை ஐகோர்ட் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது.

மனுதாரர் ரோசன் மற்றும் ஜல்லிக்கட்டு பேரவை தலைவர் ராஜசேகர், அலங்காநல்லூர் பேரூராட்சி செயல் அலுவலர் ஆகியோர் இந்த மனுவிற்கு பதில் அளிக்க வேண்டும் எனவும் சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.