அராஜகம் செய்யும் இலங்கை கடற்படையினர்? தமிழக மீனவர்களின் நிலைமை என்ன?

0
90
Anarchist Sri Lankan Navy? What is the situation of Tamil Nadu fishermen?
Anarchist Sri Lankan Navy? What is the situation of Tamil Nadu fishermen?

அராஜகம் செய்யும் இலங்கை கடற்படையினர்? தமிழக மீனவர்களின் நிலைமை என்ன?

அறந்தாங்கியில் புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதா பட்டினம் விசைப்பலகை துறைமுகத்திலிருந்து நேற்று மின் துறை 200க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 800க்கும் அதிகமாக உள்ள மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றுள்ளனர்.கரையில் இருந்து சுமார் 30 நாட்டிக்கல் மையில்  தொலைவில் காரைக்கால் அருகே உள்ள இந்திய எல்லை கடல் பகுதியில் மீனவர்கள் மீன் பிடித்து கொண்டிருந்தனர். அந்நேரமாக பார்த்து ரோந்து பணியில் இலங்கை கடற்பறையினர் வந்து கொண்டிருந்தார்கள்.

தற்போது எல்லை தாண்டி மீனவர்கள் மீன் பிடித்ததாக கூறி கார்த்திக்,தேவராஜ்,சுரேஷ், திருமேனி,வேல்முருகன், சுந்தரம் என ஆறு பேரை இலங்கை கடற்படியினர் சிறை பிடித்து சென்றனர். இவர்கள் பிடித்த விலை உயர்ந்த மீன்களான இறால் உள்ளிட்ட சிறு மீன்களையும் அபகரித்துச் சென்றனர்.

இன்று இலங்கையில் உள்ள கோட்டில் தமிழக மீனவர்களை ஆஜர் படுத்தப்படுகிறார்கள். இதன் பின்னரே மீனவர்கள் விடுதலை செய்யப்படுவீர்களா அல்லது சிறையில் அடைப்பார்களா என்று தெரிய வரும். இதேபோல் கடந்த வாரம் நாலாம் தேதி கடலுக்குச் சென்று நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த ஜெகதாபட்டினத்தைச் சேர்ந்த மகேந்திரன், மதன், வசந்த், மெல்லின், சத்யராஜ் ஆகிய ஐந்து பேரையும் சென்ற வாரம் கைது செய்தனர்.

மீனவர்கள் செய்தியாளர்களிடம் கூறுகையில் நாங்கள் அனைவரும் வயிற்றுப் பிழைப்பிற்காக கடன் வாங்கி தொழில் செல்கிறோம். நாங்கள் பிழைப்பதற்காக ஒவ்வொரு நாளும் இலங்கை கடற்படைக்கு பயந்து தொழில் செய்ய வேண்டியுள்ளது. நாங்கள் இந்திய கடல் எல்லைக்குள் மீன் பிடித்தாலும் அத்துமீறி எங்களை கைது செய்து செல்கின்றார்கள்.

அவர்களுக்கு கைது ஒரு பொழுது போக்காக இருக்கிறது போல, அவர்களுக்கு வேற வேலையே இல்லையா? இதே நிலைமை நீடித்தால் தமிழர் மீனவர்கள் ஆகிய எங்கள் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகிவிடும். எனவே மத்திய மாநில அரசுகள் விரைந்து இதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறும், சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை மற்றும் அவர்களது படகுகளையும் விடுத்து தருமாறு கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

author avatar
Parthipan K