தினமும் ஊறவைத்த பேரீச்சம்பழம் சாப்பிட்டால் இத்தனை நன்மைகளா!!?

Photo of author

By Sakthi

தினமும் ஊறவைத்த பேரீச்சம்பழம் சாப்பிட்டால் இத்தனை நன்மைகளா!!?
தினமும் சாதாரணமாக  பேரீச்சம்பழத்தை எடுத்துக் கொண்டாலே பல நன்மைகள் நம் உடலுக்கு கிடைக்கும். அதுவே பேரீச்சம் பழத்தை ஊற வைத்து சாப்பிடும் பொழுது என்னென்ன நன்மைகள் கிடைக்கின்றது என்பது பற்றி தெரிந்து கொள்ளலாம்.
சாதாரணமாக பேரீச்சம் பழத்தில் அதிகளவில் இரும்புச் சத்துக்கள் இருக்கின்றது. மேலும் இதில் பல வகையான ஊட்டச்சத்துக்கள் உள்ளது. இந்த பேரீச்சம் பழத்தில் இயற்கையாகவே இனிப்பு உள்ளது. பேரீச்சம் பழத்தை உணவில் சேர்த்துக் கொள்ளும் பொழுது மலச்சிக்கல் முதல் இரத்தசோகை வரை அனைத்து பிரச்சனைகளும் குணமடைகின்றது. மேலும் பேரீச்சம்பழத்தை ஊற வைத்து சாப்பிடும் பொழுது என்னென்ன நன்மைகள் கிடைக்கின்றது என்பது குறித்து பார்க்கலாம்.
பேரீச்சம் பழத்தை ஊறவைத்து சாப்பிடும் பொழுது கிடைக்கும் நன்மைகள்…
பேரீச்சம் பழத்தை தண்ணீரில் ஊறவைக்கும் பொழுது அதில் உள்ள டானின் மற்றும் பைடிக் அமிலம் அகற்றப்படுகின்றது. இதன் பின்னர் பேரீச்சம் பழத்தில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் நமக்கு எளிதில் கிடைக்கின்றது. பேரீச்சம் பழத்தை தண்ணீரில் ஊறவைத்து சாப்பிடும் பொழுது நமக்கு உணவு விரைவில் ஜீரணம் அடைகின்றது.
பேரீச்சம் பழத்தின் முழுமையான சுவையையும் மற்றும் அதன் முழுமையான ஊட்டச்சத்துக்களையும் பெறுவதற்கு நீங்கள் இரவு 8 முதல் 10 மணி நேரம் பேரீச்சம் பழத்தை ஊறவைத்து சாப்பிடும் வேண்டும். மேலும் ஊறவைத்த பேரீச்சம் பழத்தை சாப்பிடும் பொழுது இதில் உள்ள கார்போஹைட்ரேட் சத்துக்கள், புரதச் சத்துக்கள், நார்ச்சத்துக்கள், வைட்டமின் கே,  வைட்டமின் பி, பொட்டாசியம், மெக்னீசியம்,  இரும்பு, கால்சியம், துத்தநாகம், மாங்கனீஸ் போன்ற பல சத்துக்கள் நமது உடலுக்கு எளிமையாக கிடைக்கின்றது. மற்றும் ஊற வைத்த பேரீச்சம் பழத்தை சாப்பிடும் பொழுது பல வகையான நாய்களில் இருந்து நம்மை பாதுகாக்கின்றது.
சாதாரணமாக பேரீச்சம் பழம் சாப்பிடும் பொழுது கிடைக்கும் நன்மைகள்…
* பேரீச்சம் பழத்தை சாப்பிடும் பொழுது இரத்த அழுத்தம் கட்டுக்குள் வரும்.
* பேரீச்சம் பழத்தை சாப்பிடும் பொழுது சேர்வை நீக்கும். உடலுக்கு பலத்தை அளிக்கும்.
* உடலில் அதிகமாக இருக்கும் கொலஸ்ட்ராலை குறைக்க வேண்டும் எனில் நாம் பேரீச்சம் பழத்தை சாப்பிடலாம்.
* முன்பு கூறியதை போல பேரீச்சம் பழத்தை சாப்பிடும் பொழுது மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து விடுபட உதவுகின்றது.
* பேரீச்சம் பழத்தை தொடர்ந்து சாப்பிடும் பொழுது இதில் இருக்கும் கால்சியம் சத்துக்கள் எலும்புகளுக்கு வலிமையை சேர்க்கின்றது.
* பேரீச்சம் பழத்தை தொடர்ந்து சாப்பிடும் பொழுது நமது மூளையின் செயல்பாடு அதிகரிக்கும்.
* பேரீச்சம் பழத்தை ஆண், பெண் இருவரும் தொடர்ந்து சாப்பிட்டு வரும் பொழுது ஆண், பெண் இருவருக்கும் பாலுறவுக்கான ஆற்றலை அதிகரிக்கும்.
* பேரீச்சம் பழம் இரத்த சைகை நோயாளிகளுக்கு பல நன்மைகளை கொடுக்கும்.
* மூலநோய் உள்ளவர்கள் அனைவரும் பேரீச்சம் பழத்தை சாப்பிடலாம்.
* பேரீச்சம் பழம் தோல் மற்றும் முடிக்கு நன்மைகளை கொடுக்கும்.
* மேலும் இதயத்தை ஆரோக்கியமாக வைத்து கொள்ள பேரீச்சம் பழத்தை சாப்பிடலாம்.